பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரைப்பற்றிக் கூறும் கதைகள் 103 வரிசைப்படுத்தி, அவர்களோடு கலந்து நாற்பத்தொன்ப தாவது புலவராய்க் கலந்து வாழ்ந்துவந்தார். ஒருநாள், பொருள் இலக்கணத்தைப் புலவர்களுக்கு அறிவுறுத்த விரும்பிய இறைவன், 'அன்பின் ஐந்தினே’ என்று தொடங்கும் செய்யுளைக் கொண்ட களவியல் நூலை ஆக்கி அவர்களிடம் கொடுத்தார்; அந்நூலைப், புலவர்கள் எல்லாம் பாராட்டும் பொழுது நக்கீரர் மட்டும் அதைக் குறைகூறிப் பழித்தார். அதைக் கண்ட இறைவன், அவர் செருக்கை அழிக்க எண்ணங்கொண்டு, அரிய கருத்துக்கள் நிறைந்த ஒரு பாடலைப் பாடி இதற்குப் பொருள் கூறுங் கள்” என்று புலவர்களே நோக்கிக் கூறினர்; அந் நிலை யிலும், தம் செருக்குக் குலையாது கின்ற நக்கீரர், "இப் பாட்டு பிழையுடையது' என்று கூறினர் ; உடனே, இறைவன், ‘இவன் பொருமை உடையவன்; ஆகவே இவன் குற்றம் என்ருல், என் கவி குற்றமுடையதாகாது; நீங்கள் யாரேனும் கூறுங்கள் ; என் கவி குற்றமுடையதா ဉာx என்று கேட்டு கின்ருர்; புலவர்கள் வாய் திறந்திலர்; அங் கிலையில் உங்கள் முன் கிற்கும் புலவன் மதுரைச் சொக் கன்; உங்கள் பகை போக்க வந்துளான்; பகை நீங்கி அவனே வழிபடுங்கள்” என்ருெரு குரல் கேட்டது; உடனே புலவர் கள் அனைவரும் அவரை வணங்கி கின்றனர். அவரும் மறைநதாா. - இறைவன் செய்த களவியலுக்கு உரை எழுதினர் புலவர்கள் அனைவரும்; உரை எழுதி முடித்த அவர்கள், தங்கள் உரைகளின் தகுதி, தகுதியின்மைகளே அறிந்து கூறுமாறு, இறைவன் திருமுன் கின்று முறையிட்டனர்; இறைவன், புலவர் உருவில் வந்து கின்று, இவ்வூர், உப் பூரிகுடி கிழார்மகனுகிய ஊமை உருத்திரசன்மன்முன் உங் கள் உரைகளைக் கூறுங்கள்; அவன் கூறும் முடிவினே ஏற்றுக்கொள்ளுங்கள்,” என்று கூறினர்; ஊமை எவ் வாறு உரைவளம் காண்டான் என்று உளங் கவன்றனர் புலவர்கள் ; உடனே இறைவன், உங்கள் உரைகளே. அவன்முன் படியுங்கள்; யார் உரைகேட்டுக் கண்ணிர்