பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரைப்பற்றிக் கூறும் கதைகள் 105. இறுதியில் மதுரை சென்றனர்; அவர்களே, ஆலவாய்ப்பெரு, மான், புலவர் உருவில் வந்து வரவேற்ருர், அப்போது, அக் நாட்டு அரசனுக விளங்கிய வங்கிய சேகரன், புலவர்களின் பெருமையறிந்து, அவர்கள் இருப்பதற்கென்றே, கோயில் வடமேற்கு மூலையில், மண்டபம் ஒன்று கட்டித் தந்து பெருஞ் சிறப்புச் செய்தான் ; அதனல் அப் புலவர்கள்பால் அழுக்காறு கொண்ட பிறபுலவர்கள், நாடோறும் அவர்க ளிடம் சென்று வாதிடலாயினர் ; இத் தொல்லை பொறுக்க மாட்டாப் புலவர்கள், இறைவனே அடைந்து, அவர்கள் அறிவினை அளக்கும் அளவுகோல் ஒன்று தேவை,’ என்று கூறி வேண்டி நின்றனர்; அப்போது இறைவன், ஒருமுழச் சதுரப் பலகை யொன்றைக் கொடுத்து, தகுதி உடையார் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முழம் வளர்ந்து இடம் கொடுக்கும்; இதை அறிவு அறிகோலாக் கொண்டு உயர்மின்,” என்று கூறி மறைந்தான் ; புலவர்கள் அதைக் கொண்டு சென்று, பூசித்தனர் ; முதன்முதலில் நக்கீரர் அதில் ஏறினர் ; பின்னர்க் கபிலம்ொடு ப்ரணர் ஏறினர்; இவ்வாறே புலவர்கள் அனைவரும் அதில் எறியிருந்தனர்; இதற்குமேல் கூறும் கதை, முன்னர்க் கூறிய கதையினேயே பெரும்பாலும் ஒத்துள்ளது. . (3) கடம்பவன புராணத்தில் லீலாசங்கிாக அத்தியா யத்தில் ஒவ்வொரு திருவிளையாடல் செய்தியும், ஒவ்வொரு. பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் வரும் 15, 19 பாடல்கள் இரண்டும், கபிலர் வரலாற்றின் சில பகுதிகளைக் குறிப்பிடுகின்றன. நக்கீசர், கபிலர், பரணர் உள்ளிட்ட புலவர்கள் இறைவனிடம் வேண்டிப் பலகை பெற்றது முதல், உருத்திர சன்மன் உரைவளம் உரைத்தது வரை யுள்ள கதைகள் முன்கூறிய புராணங்கள் கூறிய முறைப் படியே கூறப்பட்டுள்ளன ; புதிதாக ஒன்றும் கூறப்பட வில்லை. ஆகவே, அவற்றை மீண்டும் விரித்துக் கூறுவது வேண்டியதில்லை. . . : (A) ஹாலாஸ்ய மஹாத்மியம் என்ற வடமொழி.ால், மதுரைச் சொக்கநாதர் நடத்திய திருவிளையாடல்களே,