பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 க. பி ல ர் அகஸ்தியர், சில முனிவர்களுக்குக் கூறியதாக எழுதப் பட்டுளது ; அதில் வரும், “ சங்கத்தவர்களுக்குச் சங்கப் பலகை தந்தது.” என்ற 57-ஆம் அத்தியாயமும், “ சங்கப் புலவர்களின் கலகத்தைச் சிவபெருமான் தீர்த்தருளியது ” என்ற 61-ஆம் அத்தியாயமும், கபிலர் வரலாருகக் கூறுவன வற்றைத் தொகுத்துக் காண்போம். நான்முகன் யாகம் செய்தது; அவன் நீராடச் சென்றபோது நாமகள் செய்த தவறு ; அவள் தவறு கண்டு நான்முகன் கொடுத்த சாபம்; நாமகள் உறுப்புக்கள் புலவர்களாய்ப் பிறத்தல்; புலவர் தம் புலமையைப் புலப்படுத்த நாடு சுற்றிக் கடைசியில் மதுரை அடைதல்; மதுரைச் சொக்கரே அவர்களே வரவேற்றல்; பாண்டிய அரசன் அவர்க்குச் செய்த சிறப்பு ; புலவர்கள் பொருமை; அதற்காகச் சங்கப்புலவர்கள், இறைவனே வேண்டிப் பலகை பெறல், அப் பலகையின் இயல்பு; புலவர் கள் மயக்கம்; இறைவனே அவர்கள் மயக்கம் தீர்த்தல்; நக்கீரர் வாதம் , களவியல் உரை, ஊமை உருத்திர சன்மன் உதவி ஆகிய இங்கிகழ்ச்சிகளும், இங்கிகழ்ச்சிகளில் கபிலர் கொண்டுள்ள பங்கும், முன்னிரு புராணங்களில் கூறியுள்ள வாறே, இதிலும் குறிப்பிடப்பட்டுள்ளமையால், அவற்றை யெல்லாம். மீண்டும் ஒருமுறை விரித்துக் கூருமல் பிற நால்களில், அவர் வரலாறு பற்றிக் கூறுவனவற்றை நோக்குவோம் - (5) கபிலர் வரலாறு குறித்துக் கூறும் நூல்களுள், திருவள்ளுவர் சரித்திரம் என்பது சிறிது விரிவான கதை யினைக் கூறுவதால் அதை முதலில் கண்டு மற்றவற்றைப் பின்னர் முறையே நோக்குதல் நன்று. பண்டைக் காலத்தில் புலவர் பலர் பாண்டிய நாட்டுத் தலைநகராகிய மதுரையில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்து வாழ்ந்திருந்தனர்; அவர்கள் தம் கல்விச் செருக்கால் சிவபெருமான மதியாது இகழ்ந்தனர்; அவ்விகழ்ச்சியைப் பொறுக்கமாட்டாச் சிவன், அப் புல வர் க ளு ைட ய செருக்கை அடக்குவதற்காகவே, நான்முகனத் திருவள்ளு வராகவும், திருமாலை இடைக்காடராகவும், கலைமகளை