பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரைப்பற்றிக் கூறும் கதைகள் 109. காலம் எண்ணி இாங்கி ஏங்கினுள் ; தாயின் துயர்நிலை கண்ட குழந்தை, ஒரு பாட்டுப் பாடி அவள் கவலையை மாற்றிற்று பாடலைக் கேட்ட அவளும் அகம் மகிழ்ந்து மனந் துணிந்து விட்டுச் சென்ருள்; இவ்வாறே தொண்டை நாட்டு ஊற்றுக்காட்டில் பிறந்த உப்பை என்ற பெண் குழந்தையையும், சோழநாட்டுக் கருவூரில் பிறந்த அதிக மானேயும், புகார் நகரத்தில் பிறந்த உறுவையையும், அங் கங்கேவிட்டுச் சென்றனர்; பின்னர்த் திருவாரூரில் கபிலர் பிறந்தார்; அப்போது அவர், - - ' கண்துழையாக் காட்டிற் கருங்கல் தவளைக்கும் உண்ணும் படிஅறிந்து ஊட்டுமவர்-கண்ணும் நமக்கும் படியளப்பார் நாரியோர் பாகர் தமக்கும் தொழிலென்ன தான்.” என்ற பாடலைப் பாடிப் பெற்ருேரைத் தேற்றி அனுப்பினர்; கபிலருக்குப் பின்னர், வள்ளி, கிருவள்ளுவர் என்ற இரு குழந்தைகளும் பிறந்தன. அவற்றையும், அவை பாடிய ப்ாடல் கேட்டு விட்டுச் சென்றனர். கபிலர் பிறப்புக் குறித்து, திருவள்ளுவர் சரிதை கூறும் கதை இது: (6) கபிலாகவல் என்ற சிறு நூல், கபிலர் செய்தது என்பர் சிலர் ; கபிலரை வளர்த்து வந்த பார்ப்பனன், அவருக்கு உபநயனம் செய்யக்கருதிப் பார்ப்பனர் சிலரை அழைக்கி, அவர்கள் “ பார்ப்பார் குலத்தில் பிறவா இவனுக்கு உபநயனம் செய்துவையோம், ’ என்று மறுத்த போது, பிறப்பினல் உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது என அப் பார்ப்பனர்க்கு அறிவுரை கூறியதாக அமைக் துளது இச் சிறு நூல்; இதில், கபிலரே தம் வரலாற்றைக் கூறுவதாக அமைந்துள்ளது; அதை அப்படியே கூறுகின் றேன்: - s - * அருந்தவ மாமுனி யாம்பக வற்குக் கருஆர்ப் பெரும்பதிக் கண்பெரும் புலைச்சி ஆகி வயிற்றினில் அன்று அவதரித்த கான்முளே யாகிய கபிலனும் யானே :