பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 க பி ல ர் என்னுடன் பிறந்தவர் எத்தனைபேர் எனின், ஆண்பால் மூவர்; பெண்பால் நால்வர்; யாம்வளர் திறம்சிறிது இயம்புவல் கேண்மின்; ஊற்றுக் காடெனும் ஊர்தனில் தங்கியே வண்ணுர கத்தில் உப்பை வளர்ந்தனள், காவிரிப்பூம் பட்டினத்தில் கள்விலைஞர் சேரியில் சான்ருேர் அகந்தனில் உறுவை வளர்ந்தனள், காப்புக் கருவியோர் கண்ணிடும் சேரியில், பாணர் அகத்தில் அவ்வை வளர்ந்தனள், குறவர் கோமான் கொய்தினைப் புனம்சூழ் வண் மலைச் சாரலில் வள்ளி வளர்ந்தனள், தொண்டை மண்டலத்தில் வண்தமிழ் மயிலைப் பறைய ரிடத்தில் வள்ளுவர் வளர்ந்தனர்; அரும்பார் சோலைச் சுரும்பார் வஞ்சி அதிகன் இல்லிடை அதிகமான் வளர்ந்தனன்; பாரூர் நீர்நாட்டு ஆரூர் தன்னில், - அந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன்.” (கபிலாகவல்) - (7) ஞானமிர்தம் என்னும் நூல், யாளிதத்தன் என்னும் முனிவன், தன்னல் வெட்டுண்டு கிணற்றில் தள்ளப்பட்ட ஆதப்புலேச்சி என்னும் அறிவில்லாச் சண்டா ளப் பெண்ணை, ஒரு பிராமணன் எடுத்து வளர்த்துப் பின் னர்த் தனக்கே மனம் செய்து கொடுக்கக் கொண்டு கபிலர் முதலாக ஏழு மக்களைப் பெற்ருன் என்று கூறு கிறது. (8) புலவர் புராணம், ஒளவையார் சருக்கம், நான் முகன் அம்சமான பகவன் என்னும் அந்தணனும், கலை மகள் அம்சமான ஆதி என்பவளும் ஏழு குழங்தைகளைப் பெற்றெடுத்தனர்; அவ்வெழுவருள் ஆண்மக்கள் மூவர்; பெண்மக்கள் நால்வர்; ஒளவையார், வள்ளுவர், கபிலர் அதியமான் என்னும்_நால்வரும் தம் புலமை உலகிற்கு விளங்கி கிற்குமாறு செய்தனர்; மற்றைப் பெண்கள் மூவ ரும் தம் இயல்பினே வெளிக்காட்டாது இருந்துவிட்டனர்,” என்று கூறுகிறது.