பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரைப்பற்றிக் கணம் கதைகள் 111 (9) பன்னிரு புலவர் சரித்திரம் என்ற நூல், வேத மொழி என்பாருக்குப் பேராளி என்ருேர் மகன் பிறந்தான்; அம் மகனுக்குப் பன்னிரண்டாம் ஆண்டு நிகழ்கையில், அவ்வூரில் வாழ் ஒர் இழிகுலக்கானுக்குப் பெண் மக வொன்று பிறந்தது ; அப் பெண் பிறந்தமையால் ஊருக்கு அழிவுண்டாம் எனக் கருதி ஊரார் அப் பெண்ணைக் கொல்லத் துணிந்தனர் ; ஆனல் வேதமொழியார், அப் பெண்னே ஒரு பேழையுள் வைத்துக் காவிரிவெள்ளத்தில் விட்டுவிட்டார்; ஆற்றில் வந்த அப் பெண்ணே அந்தணன் ஒருவன் எடுத்து வளர்த்தான்; சில ஆண்டு கழித்து, புண்ணிய நீராடல் குறித்து அங்கு வந்த பேராளியார், அப் பெண்ணை மணம் செய்துகொண்டார் ; மணம் முடிந்த பின்னர், அவள், தன் தந்தையால் ஆற்றில் விடப்பட் இழிகுலப் பெண் என்பதறிந்து, அவளே விட்டுப் பிரிந்து போய்விட்டார் ; பின்னர், அப் பெண் தன்சீனக் காத்து வந்த அந்தணன் ஒருவன் விட்டுச் சென்ற பெரும்பொரு ளோடு காசி சென்று, கங்கைக் கரையில் அறச்சால்ே அமைத்த வருவோர்க்கு அன்னமிட்டு, அவர்பால் தன் வரலாறு கூறி அழுது வருவளாயினுள் ; ஒருநாள் பேராளியார் அங்கு வர, அவர்க்கும் அன்னமிட்டு வழக்கம் போல் தன் வரலாறு கூறி அழுதாள். அங்கிலையில் அவர், அவள் நற்குணம் கண்டு, அன்றுமுதல் அவளோடு வாழ்ந்தனர்; பின்னர் அவர்க்கு ஏழு குழந்தைகள் பிறந் தன; அம் மக்களுள் ஒருவர் தம் கபிலர். i - இக் கதைகள் அனைத்தையும் ஒப்பு நோக்கியவழி, இவையெல்லாம் ஒன்றற்கொன்று மாறுபடக் கூறுகின்றன என்பது புலம்ை. திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், பாஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் இரண்டனுள், பழைய திருவிளையாடல் எனச் சிறப்பிக்கப் படும் திருவாலவாயுடையார் திருவிளையாடல் காலத்தால் முற்பட்டது; அதனுள், சங்கப் புலவர்களின் முற் பிறப்பு வரலாறு ஒன்றும் கூறப்படவில்லை; சங்கப்புலவர்களோடு புலவர் பலர் வாதம் புரிந்தனர் என்றும், அதனுல் மனம்