பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 க பி ல ர் தளர்ந்த சங்கப்புலவர்கள், மதுரைச் சோமசுந்தரப் பெரு மானிடம் முறையிட்டுப் பலகை வேண்டினர்கள் என்றும் கூறப்படும் செய்திகளும் அதிற் காணப்படவில்லை; சங்கப் புலவர்கள், நாமகளின் உடற்கூறுகளின் அம்சமாம் என் ஆறும், நாமகள், நான்முகன்பால் பெற்ற சாபத்தின் விள வால், அவ்வெழுத்துக்களே அப் புலவர்களாய்ப் பிறந்தன என்றும் கூறப்படும் புலவர்களின் முற்பிறப்பு வரலாறு களும், பிறவும், வடமொழிஹாலாஸ்ய மஹாத்மியத்திலும், அதை முதல் நூலாகக் கொண்டு இயற்றப்பெற்ற பரஞ் சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்திலும் மட்டுமே கூறப்பட்டுள்ளன, ஆகவே, இவையெல்லாம் பின்னர் துழைக்கப்பட்ட பிற்காலத்தார் கற்பனேகளே என்பது தெளிவு. மேலும் கபிலர் பிறப்புக் குறித்தும் அவரோடு உடன் பிறந்தாராகக் கொள்ளும், ஒளவையார், உப்பை, உறுவை, அதிகமான், வள்ளி, வள்ளுவர் முதலியோர் பிறப்புக் குறித் தும் வழங்கும் கதைகளே ஒருமுறை நோக்கிய எவரும், அக் கதைகளிடையே ஒருமைப்பாடு இல்லாமையைத் தெளி 令儿Tö历·盟一öT*Q肋T。 - திருவள்ளுவர் சரித்திரம், அகஸ்தியர் புதல்வர் பெருஞ்சாகரர் என்பவருக்கும் திருவாரூர்ப் புலேச்சி ஒருத் திக்கும் பிறந்தவர் பகவன் என்றும், தவமுனி என்பவருக் கும், அருண்மங்கை என்னும் பார்ப்பனப் பெண்ணிற்கும் பிறந்து முதலில் உறையூர்ப் பெரும் பறையலுைம், பின் னர் நீதிஐயன் என்னும் பார்ப்பனலுைம் வளர்க்கப்பட்ட வள் ஆதி என்றும் கூறுகிறது. கபிலாகவல், பகவன் பிறப்புக் குறித்து ஒன்றும் கூருது, அவனே அருந்தவமாமுனி என்று மட்டும் குறிப் பிட்டுவிட்டு, ஆதியைக் கருவூர்ப்புலேச்சி என்று கூறு கிறது. ஞானமிர்தம், கபிலர் முதலியோர் தங்தை பகவன் என்பதற்கு பதிலாக, யாளிகத்தன் என்னும் பெயரினன்