பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரைப்பற்றிக் கூறும் கதைகள் 113 என்றும், தாய் ஆகப்புலேச்சி என்றும் குறிப்பிட்டு, அவர் இருவர்க்கும் திருமணத்தொடர்பு உண்டானது குறித்துப் புதியதொரு கதை கூறுகிறது. X- - - பன்னிரு புலவர் சரித்திரம், கபிலர் தந்தை, வேத மொழியார் என்பார் மகன் போளி என்னும் பார்ப்பனன் என்று மட்டும் கூறி, அவர் தாய்பெயர் குறியாது, அவளோர் இழிகுலப் பெண் என்று மட்டும் குறிப்பிட்டு, இருவர் பிறப்புக் குறித்தும், அவர்கள் வளர்ந்த வகை குறித்தும் மணம்கொண்ட முறை குறித்தும் புத்தம் புதிய புனேந்துரைகளைக் கூறுகிறது. く x, - திருவள்ளுவர் சரித்திரம் நான்முகன், வள்ளுவராக வும், நாமகள் ஒளவையாராகவும் அவதரித்தனர் என்று கூறப், புலவர் புராணம், நான்முகன், பகவனுகவும், காமகள் ஆதியாகவும் அவதரித்தனர் என்று கூறி முன்ன வற்ருேடு முரண்படுகிறது. - - திருவள்ளுவர் சரித்திரம் முதலாயின, ஒளவையார் பிறந்த இடம் பாணர்சேரி என்று மட்டும் குறிப்பிட்டு ஊர் குறிப்பிடாமல் போக, அவர்கள் வரலாறு கூறும் நூல்களுள் ஒன்ருகிய விநோதரச மஞ்சரி, அவர் உறை யூர்ப் பட்டினத்துச் சாவடியில் பிறந்தார் என்று கூறு கிறது. , - இவ்வாறு கபிலர் முதலியோர் பிறப்புக் குறித்து வழங் கும் கதைகள் எல்லாம், ஒன்றற்கொன்று மாறுபடுவன வாகவே காணப்படுதலால், அக் கதைகள் எல்லாம் பிற்கால மக்கள் மனக் கற்பனையில் தோன்றி வளர்ந்தனவேயன்றி உண்மை வரலாறுகளாகா; ஆகவே, அவற்றை அடிப்படை யாகக்கொண்டு, கபிலர் முதலியோர் வரலாற்றினை வரை யறுப்பது அறிவுடைமையாகாது. : . " அகர முதல் எழுத்தெல்லாம்: 哥 ಥಿ-ಹar முதற்றே உலகு" என்ற முதற் குறளில் வரும் ஆதிபகவன் என்ற சொல்லை, ஆதியும், பகவனும் என இரு சொல்லாகக் க.-8 - . . .