பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 க பி ல ர் கொடையாலும் கொற்றத்தாலும் சிறந்த காரியின் புகழ் கேட்டார் கபிலர்; அவன்பால் சென்று பரிசில்பெற விரும்பினர். போராலும் நீராலும பாழாகா அவன் காட்டின் சிறப்பு, மூவேந்தர்க்குத் துணேபோகும் அவன் வெற்றிச் சிறப்பு, கற்பு நெறி பிறழா மனேவியோடிருந்து நடாத்தும் அவன் இல்லறச் சிறப்பு இவைகளே விளக்கும் பாட்டு ஒன்றைப் பாடிக்கொண்டு சென்று அவனேக் கண் டார். அவன் அரசவையில் கபிலரைப்போலவே, வேறு பல புலவர்களும்வந்து அவனைப்பாடினர். அவர்கள் பாடல்களைக் கேட்ட காரி, அனேவர்க்கும் பரிசில் அளித்தான். அவன் அளித்த பரிசிலைக் கபிலர் கண்டார்; பெரும் புலவராகிய தமக்குத் தம் தகுதிநோக்கிப் பெருமதிப்புத் தாராமல், மற்ற புலவர்களைப் போலவே தம்மையும மதித்து விட்ட அவன் செயல் அவருக்கு வருத்தத்தைக் கொடுத் தது. தம் தகுதிக்குப் பொருந்தாத பரிசிலைப்பெற அவர் விரும்பவில்லை. வரிசை அறியா அவன் செயல், தமக்கு மட்டுமேயல்லாமல், தம்மைப்போலவே, வரி சைக்கு வருந்தும் பரிசிலாகிய பெரும்புலவர் அனேவர்க் குமே இழிவாகும் என்று கருதினர். உடனே புலவர் காரியை நெருங்கி, பெருங்கொடை வள்ளலே! நான் கூறுவனவற்றைச் சிறிது அருள் கூர்ந்து கேட்பாயாக, வள்ளல் ஒருவன் இருந்தால், அவனிடத்தில் பரிசில்பெறப் பலர் வருவர் வந்தவர்க்கெல்லாம், தம்மிடம் உள்ளதை இல்லையென்னுது கொடுப்பது எவர்க்கும் எளிது; அதை எவரும் செய்வர் ; அகற்கு மனம் ஒன்றே போதும். ஆனல், பரிசில்பெற வருவோர் அனேவரும் ஒரே தகுதி யுடையரல்லர் ; ஆகவே, அவர்களின் தகுதி நோக்கி, இவர் மிகச் சிறந்தார்; இவர் சிறந்தார்; இவர் அத்துணைச் சிறந்தா சல்லர் என அறிந்து, அதற்கேற்பப் பரிசில் அளிப்பது எளிதன்று; அதற்கு மனம் மட்டும் இருந்தால் போதாது ; வரிசை அறியும் அறிவும் தேவை; உன்பால் அவையிரண் டும் இருக்கும் என எண்ணியே வந்தேன்; ஆனல், வரிசை அறியும் அறிவு நின்பால் இருக்கக் காண்கிலேன் ; நீ மனம்