பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரும் காரியும் 7. ஒன்றே படைத்தவனுதலை நான் விரும்பவில்லை ; மனக் தோடு வரிசை அறியும் அறிவும் பெற்ற மன்னனுகவே உன்னேக் காண விரும்புகின்றேன் ; பொதுநோக்கு நோக் காது வரிசையா நோக்குத்ல், எம் போல்வார்க்கு மகிழ்ச் சியை அளிப்பதோடு, தும்போல்வார்க்கு ஆக்கமும் தரும். ஆகவே, இனிமேலாயினும், வங்தோர் அனைவரையும் ஒன்றென மதியாது அவர் தகுதி அறிந்து மதித்து, அதற். கேற்பப் பரிசில் கொடுக்கும் வழக்கத்தை மேற்கொள்வா யாக,” என்று அறிவுறுத்தினர். “ஒரு திசை ஒருவனை உள்ளி நாற்றிசைப் பலரும் வருவர் பரிசில் மாக்கள் ; வரிசை அறிதலோ அரிதே பெரிதும் ஈதல் எளிதே; மாவண் தோன்றல் அதுான் கறிந்தனை யாயின், பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே’ (புறம்: கஉக) இவ்வாறு பாடிய அவர் பாடற்பொருள் உணர்ந்த காரி, கபிலரின் புலமைச் சிறப்பையும், பிழை கண்டு. பொருத அவர் உள்ள உறுதியையும் உணர்ந்து, அவர் மகிழும் வண்ணம் மேலும் பல பரிசில் அளித்துப் பெருமை செய்தான். காரியால் சிறப்புச் செய்யப்பெற்ற கபிலர், அவன் அவைக்களத்தே சிலநாள் இருந்தார். அக்காலத்தில் அவன்பால் அவர்கண்ட சில அருங்குணங்கள் அவர் உள் ளத்தைக் கொள்ளைகொண்டன. கபிலர் காலத்தில் வள்ளல் களாக விளங்கியோர் பலர் ; அவர்கள், தம்மை நோக்கி, வந்தவர்களுக்கெல்லாம் தேர் பல கொடுத்தே சிறப்புச் செய்கின்றனர் என்ருலும், அவர்கள் அவ்வாறு அளிப்பது மதுவுண்டு மகிழ்ந்திருக்கும் காலத்திலேயே ஆம்; மது வுண்ட காரணத்தால், தாம் செய்வது யாது என்பதை அறியமாட்டா மயக்கநிலை உற்று விடுகின்றனர்; அதனல் கொள்வோர் தகுதியும், கொடுக்கும் பொருளின் அருமை யும் அறியாது போகின்றனர்; ஆகவே, அந்நிலையில் அவர்கள் பரிசில் அளிப்பது தம் இயற்கையறிவோடிருந்து