பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. கபிலரும் பேகனும் ஆரிய அரசன் பிாகத்தன்பால் விடை பெற்றுக் கொண்ட கபிலர், தாம் அதுகாறும் வாழ்ந்திருந்த சோழ காட்டை விட்டுப் பாண்டியநாடு நோக்கிச் செல்வாராயினர்; அவருடைய சுற்றத்தினரும் அவரோடு வந்தனர். இடை வழியில் பெருவள்ளல் எவரும் இல்லாத காரணத்தால் கைப்பொருள் முழுவதும் கரைந்து போயிற்று. வழிநடை வருத்தத்தாலும், களை தீர உண்ண உணவு இல்லாக் குறையாலும், மேலும் நடக்கமாட்டாது சுற்றத்தார் இளேத்தனர். அப்போது அவர்கள் மதுரை மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இருந்த இடத்திற்கு அண்மையில் பொதினி என்ற மலை ஒன்று உண்டு; அது ஆவினன்குடி எனவும் வழங்கப்பெறும்; இப்போது பழனி என வழங்குமிடம் அதுவே. பழனிமலை, முருகனுக்குரியது என்பதற்கேற்ப, பொதினிமலைக்குரிய நெடுவேள் ஆவி என்பானின் போராற்றலுக்கு, முருகனின் போர்த்திறம் உவமை கூறப் படுவதும், முருகன் தற்போர் நெடுவேள் ஆவி,” பொதினி மலைக்குரியோளுகிய பேகன்மலை, தெய்வக் காப்புடையது, “அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமை” எனக் கூறப் படுவதும் காண்க. அப் பொதினிமலை, ஆவியர் என்ற குடிப் பெயருடைய குறுகில மன்னர்கள் ஆட்சிக்குரியது. இவ் வாவியர் என்பார் யார் என்பது நன்கு புலகைவில்லை; "நெடுவேள் ஆவி அறுகோட்டு யானைப் பொதினி,” 'நெடுவேள் ஆவி பொன்னுடை நெடுநகர்ப் பொதினி' என்ற அகநானூற்றுத் தொடர்களில் வரும் நெடுவேள் ஆவி என்பவனே, இவ் வாவியர் குல முதல்வனுவன் என்று கூறுவர் சிலர்; அவ்வாருயின், இவ் வாவியர் என்பவர், வேளிருள் ஒரு பகுதியினராவர் என்பது பெறப்படும். கபிலர் கால்த்தில் அப் பொதினிமலைக் குரியோசை இருந்தவன், வையாவிக் கோப்பெரும் பேகன் என்பவன். பழனியில் உள்ள வையாவிக்குளம் என்ற பெயர், வையா