பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரும் பேகனும் 13. முழங்குவதுபோல் ஒலித்துக்கொண்டோடும் மலையருவி களின் அருகே அமைந்திருந்த, பேகனுடைய அழகிய சிறிய வீட்டை அடைந்தனர்; லாயிலில் கின்று உள்ளிருப்போர்க் குத் தம் வருகையை உணர்த்தினர்; சிறிது நேரத்திற்கெல் லாம் அங்கே அவர்கள் கண்ட காட்சி, கபிலர் உள்ளத்தைக் கலக்குவதாயிற்று; பேகனின் இளம் மனைவி, கண்ணகி என்னும் பெயருடையாள், அழகே உருவென வங்கவள், கற்பே பொற்புடை அணியெனக் கொண்டவள் வாயிலில் வந்து கின்று வருக” என வரவேற்பதற்கு மாருக, வாய் விட்டு அழுவதையும், அவள் கண்கள் இரண்டும் கண்ணிர் உகுத்துக் கலங்குவதையும் கண்டார்; “கலங்குவதற்குக் காரணம் யாது?’ எனக் கனிவுடன் கேட்டார்; அதற்கு அம்மையார், பெரியீர்! அவர்-உங்கள் தலைவர்-பேகன் இங்கே வாழ்வதை வெறுத்து, கல்லூர்ப் பரத்தை ஒருத்தி யோடு வாழ்கிருர்; அதனுல் என் வீடுநோக்கி வருவார்க்கு விருந்தளித்து வாழும் வாழ்க்கை எனக்கு இல்லையாயிற்று.” என்று கூறிப் பின்னர் எதுவும் கூறமாட்டாளாய் வருந்தி அழலாயினள். பேகன், கொடையும் கொற்றமும் உடையவனே எனினும், அவன் தீயொழுக்கம் உடையான் என்பது கண்டு அவன்பால் வெறுப்பும், அவன் ச்ேசெயல் கண்டு வருந்தும் அவன் மனைவி கண்ணகிபால் இரக்கமும் கொண்டார் கபிலர், பேகன் தவறினன் எனினும், கிருத்தி கல்வழிப் படுத்தல் கூடும் என்று நம்பினுர்; உடனே டேகன் வாழும் நல்லூர் சென்ருர்; அங்கே, தம்மைப்போன்றே, பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றார்கிழார் முதலிய பெரும் புலவர்களும் அவனுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருப் பதைக் கண்டார்; அவர்களோடு சேர்ந்து அவனுக்கு அறி வுரை பல கூறினுர். "பேக! நேற்று, யானும் என் சுற்றமும் மலைமேல் அமைந்த கின் ஊர் சென்று,சின் மனேயின் முன் கின்று, கின்னேயும், கின் மலையையும் வாழ்த்திப் பாடியிருந்தோம். அப் பாடல் கேட்டு ஒரு பெண் வெளியே வந்தாள்; அப்