பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. கபிலரும் பாரியும் பொதினி மலைவிட்டுக் கபிலர் புறப்பட்டார். பாண் டிய நாட்டில் பறம்பு என்ற மலையொன்றுண்டு; அது இப்போது பிரான்மலை என வழங்குகிறது; அப் பறம்பு மலேயைச் சூழ முந்நூறு ஊர்களைக்கொண்ட ஒரு சிறு நாடும் இருந்தது; அம் மலையின் பெயரே அக் காட்டிற்கும் பெயராய் அமைந்தது; புதுக்கோட்டை என இப்பொழுது வழங்கும் நாடே, அக் காலத்தில் பறம்பு நாடு எனப் பெயர் பெற்றிருந்தது. அந் நாட்டை வேளிர்குலத் தலைவ கிைய பாரி என்பவன் ஆண்டுவந்தான்; பாரி ஒரு பெரு வீரன்; சிறந்த கொடை வள்ளல்; ஒருநாள் தேர் ஏறிச் சென்ற பாரி, வழியில் தழைத்து வளர்ந்த முல்லைக்கொடி யொன்று, படர்தற்குரிய கொழுகொம்பின்றி, காற்ருல் அலைப்புண்டு வருந்துவதைக் கண்டான்; அந்தோ; இக் கொடி, கம்மைப்போல் பேசும் ஆற்றலைப் பெற்றுள்ளதாயின் தன் குறை கூறி அழும்; ஆல்ை, அது அவ்வாற்றலைப் பெருமையாலன்ருே அது செய்யாது வருந்துகிறது? எனினும், அதன் தேவை கண்ட நான், அதற்குத் துணை செய்யாது போதல் தகுதியன்று, எனக்கொண்டு, ஏறி வந்த பொற்றேரை அதன் அருகே கிறுத்திப் பற்றிப் படருமாறு விட்டுச்சென்ருன். பாரியின் இவ்வருள் உள்ளத்தையும், கொடைச் சிறப்பையும் தமிழகம் முழு வதும் பாராட்டிற்று. பின்னர் வந்த சுந்தரமூர்த்தி நாயனரும் கொடை வள்ளலுக்கு இவனேயே எடுத்துக்காட்டாகக் கொண்டார்; 'கொடுக்கிலாதானப் பாரியே என்று கூறினும் கொடுப் பாரிலே,” என்று பாராட்டினர். அவன் காலப்புலவர் பலரும் அவனேக் கண்டு பாராட்டிப் பரிசில் பெறுவதைத் தமக்குப் புகழ் எனக் கருதினர். பாரியின் புகழ் புலவர் பாராட்டெல்லையையும் கடந்துவிட்டது; அவன் புகழ் முழுவதையும் கண்டு பாராட்டல் புலவர்க்கும் இயலாது போயிற்று. 'புலவர் பாடியானப் பண்பு” என்று அவன் புகழ்கண்டு வியந்தனர் புலவர்கள்.