பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 க பி ல ர் கபிலர் பாரியின் புகழ் கேட்டார். அவன்பால் சென்று பரிசில் பெற விரும்பினர். உடனே பறம்பு நோக்கி நடந்தார்; பாரியைக் கண்டார்; அவனேயும் அவன் மலையையும் பாராட்டினர்; கபில்ரின் அருமை பெருமை அறிந்த பாரி, அவரை அன்போடு வரவேற்ருன்; அவர் பாடிய பாடல் கேட்டு அகமகிழ்ந்தான்; அவர் புலமை நலம், அவன் அன்பைக் கவர்ந்தது; பாரியின் பெருங் குணம் கபிலரையும் கவர்ந்தது, கபிலரைத் தன் உயிர்த் துணைவராகக் கொண்டான் பாரி, பாரியைப் பிரிய அவரும் விரும்பவில்லை. ஆகவே, கபிலர், பறம்பு மலையிலேயே பல ஆண்டு இருந்து வாழ்வாராயினர். பாரிபால் வந்து பொருள் வேண்டி கிற்போர் பெரும் புலவராக, அருங்குணச்சீலராக இருக்கவேண்டும் என்ப தில்லை. வாயில் வந்து கின்ருேர் அறிவிலாச் சிறியரே யாயினும், அவர்க்கும் அவர் வேண்டுவன அளிப்பான்; பொருள்வேண்டி வந்து கின்ருேர் இழிகுணமுடைய கீழோரே ஆயினும், அவர்க்கும் அவர் விரும்புவன அளிப் பான்; ஆகவே, அவன்பால் வந்து வறிதே மீண்டவர். எவரும் இார்; மடவர், மெல்லியர் செல்லிலும், கடவன் பாரி கைவண் மையே. அவன் பறம்பு நாடு முந்நூறு ஊர்களே உடையது அம் முந்நூறு ஊர்களையும் கன்பால் பொருள் வேண்டி வந்த இரவலர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஊராகக் கொடுத்து அவர் உடைமையாக்கிவிட்டான்; பறம்பு மலையொன்றே அவன் உடைமையாக இருந்தது. பாரியின் கொடை வளத்தைக் கண்டு பழகிய கபிலர், கொடைத்திறத்தில் அவனுக்கு சிகர் அவனே; இவ்வுலகில் எவரும் அவனுக்கு கிகாகார் என்பதை உணர்ந்து, அவன் புகழை ஒர் அழகிய சிறு செய்யுளால் பாராட்டுவாராயினர்; புலவர் எவரை நோக்கினும், பாரியின் கொடை, பாரி யின் வள்ளன்மை, பாரியின் அன்பு, பாரியின் புகழ்' என்று எங்கும், எப்பொழுதும் பாரி பாரி பாரி என்று இவன் ஒருவனேயே புகழ்கிருர்களே அவர்கள் அறிவின் மையை என்னென்பேன். இந்த உலகில் இவ்வாறு உதவு வோன் இவன் ஒருவன் தான வேறு ஒருவரும் இல்லாமலா