பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 க பி ல ர் னேப் புகழ்ந்தார். இவ்வாறு சொல்லால் இகழ்வதுபோல் காட்டிப் பொருளால் புகழ் தோன்றப் பாடிய பெரும் புலமை கபிலர்க்கே உரியது. இவ்வாறு பாரியின் புகழ் பாடிக்கொண்டே பறம்பு மலையில் கபிலர் வாழ்ந்திருந்தார். பாரியின் புகழ் நாள்தோறும் பெருகிற்று; சேய நாடு களிலும் அது பரவிற்று; தமிழகமெங்கும் உள்ள பாணர், கூத்தர் முகலாய இரவலர்களும், புலவர்களும் பாரியின் புகழன்றிப் பிறர் புகழ் பாடாாயினர். இவ்வாறு அவன் புகழ் வளர்தல், அப்போது தமிழ்நாடாண்ட மூவேந்தர் உள்ளத்தில் பொருமைத் தீயை மூட்டிற்று. "பேராசர் காமிருக்கப் பாரியின் புகழ் பாரெங்கும் பரவுவதா?’ என்று எண்ணினர்; புகழால் அவனேவிட உயர்தல் தம்மால் இயலாது என்பதையும், அவன் உயிரோடுள்ளவரை, தம் புகழ் உயர வழியில்லே என்பதையும் உணர்ந்தனர். ஆகவே அவனே எவ்வாருயிலும் அழித்துவிடுவது என்று முடிவு செய்தனர்; மூவேந்தரும் ஒன்று கூடினர்; மூவேந்தர் படை யும் ஒன்று கூடி ன; பறம்பு மலையைச் சூழ்ந்து முற்றுகை யிட்டனர். கபிலர், மூவேந்தர் முற்றுகை செய்திருப்பது கண்டார்; அவர் செயல் விழலுக்கிறைத்த நீராகுமேயன்றிப் பயன்தாது என்பதைக் கபிலர் அறிவார்; ஆகவே, அரசர் மூவர்க்கும் அறிவுரை மொழிந்து அதைத் தடுக்க விரும்பினர். - - முற்றுகையிடுவதால், அரனுள் இருப்போர் வெளி யிலும், வெளியிலிருப்போர் உள்ளும் செல்லாதவாறு தடை செய்யப்படுவர்; அவ்வாறு தடை செய்யப்படுவதால், உள்ளிருப்போர்க்குத் தேவையான உணவுப் பொருள் வெளியேயிருந்து வருதல் இயலாதாம். அங்கிலை ஏற்படின் உள்ளிருப்போர் உணவில்லாக் குறையால் வருந்தி, அக் கோட்டையைத் திறந்து, பகைவர்க்குப் பணிந்து போவர். இதுவே முற்றுகையின் நோக்கம். இவ்வெண்ணம் கொண்டே பறம்பினை மூவேந்தரும் முற்றுகையிட்டனர். ஆல்ை, அவர் எண்ணியது தவறு; அவர் போட்ட போர்த் திட்டம் பிழைபட்டது என்பதைக் கபிலர் அறிவார்.