பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 க பி ல ர் உங்களுக்காம் என்று எண்ணுதீர்கள். முயன்று போரிட்டுப் பெறுதல் உங்களாலும் இயலாது; பாரியும் உங்கள் வாள் வலி கண்டு அஞ்சிப் பறம்பினைக் காான்,' என்று அறி வுரை கூறினர். அளிதோ தானே பாரியது பறம்பே; நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும், உழவர் உழாகன நான்குபயன் உடைத்தே; ஒன்றே, சிறியிலே வெதிரின் நெல்விளை யும்மே; இாண்டே, தீஞ்களைப் பலவின் பழம் ஊழ்க் கும்மே; மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே; நான்கே, அணிகிற ஒரி பாய்தலின் மீதழிந்து திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே; வான்கண் அற்று அவன்மலையே; வானத்து மீன்கண் அற்று அதன்சனையே ஆங்கு, மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும், புலந்தொறும் பாப்பிய தேரினி ராயினும், தாளிற் கொள்ளலிர், வாளில் தாாலன்.' (புறம் க0க) பறம்பு கொள்ளுதற்கு அருமையுடையது என்பதை அவ்வளவு தெளிவாக விளக்கிக் கூறியும் முற்றுகையைக் கைவிடாது மூவேந்தர்கள் மேற்கொண்டனர். கபிலர் பொறுமை இழந்தார்; வேந்தர்களே வெகுண்டு கோக்கி ஞர். வேந்தர்களே! பறம்புகாடு வளமிக்க ஊர்கள் முக் நூறு கொண்டது என்ற வேட்கை மேலிட்டு வந்திராயின், உங்கள் ஆசையை விட்டொழியுங்கள், பறம்புநாடு முந் நூறு ஊர்களைக் கொண்டது என்பது உண்மையே; எ தும், அவற்றின்பால் பாரிக்கு உரிமையில்லை; அவன், தன்னைப் பாடிய இரவலர்க்கு அவ்வூர்களைப் பரிசிற்பொரு ளாகக் கொடுத்து எத்தனையோ ஆண்டுகள் ஆகின்றன; ஆகவே, அவற்றின்பால் ஆசைகொண்டு பயனில்லை. நான் இருக்கிறேன்; பாரி இருக்கிருன்; புறம்புமலை இருக் கிறது; இவையே எங்கள் உடைமை; பறம்புநாடு இல் லாதுபோயினும், பறம்பு மலேயையாவது கைக்கொண்டு.