பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 க பி ல ர் அவன் தாக்குதல் எதிர்பாதது; ஆகவே, மூவேந்தர்படை, பர்ரியின் வீரர்க்கு எதிர்கிற்க மாட்டாது நிலைகுலைந்து தோற்றது; பாரி வேந்தரை ஒட்டி வெற்றி பெற்ருன். பாரியின் புகழ் இயல்பாகவே எங்கும் பரவியிருந்தது. இம் முற்றுகை அவன் புகழை மேலும் உயர்த்துவ தாயிற்று. பாரியின் புகழ் வளர்வதைக் கண்டு பொருமை கொண்ட மூவேந்தர்கள், அவன் புகழ் மேலும் வளத் தாமே காரணமானது கண்டு வெட்கித் தலைகுனிந்தனர். அவனே வாழவிடக் கூடாது என்ற எண்ணம் அவர்க்கு முன்னேயினும் பன்மடங்கு மிக்கது. ஆல்ை, பாரியைப் போரில் வெல்வதோ இயலாது; அதை அவர்கள் நேரி லேயே அறிந்துகொண்டனர். ஆகவே, அவர்கள் போர் முறையை மேற்கொள்ள விரும்பவில்லை , கபிலர் கூறியன அவர் கவனத்திற்கு வந்தன; பேரரசர்கள் பிழை நெறி செல்லார் என்றே கபிலர் கூறினர். ஆனல், அப் பேர ரசர்களின் பொருமைஉள்ளம், அவர் நெறி தவறு வதைத் தடுக்காது போயிற் று ; கபிலர் கூறியவாறே, பானர்போல் சென்று பாரியைப் பாடிப் பரிசிற்பொருளாக வனேயே பெற்று, உடன்கொண்டு சென்று உயிர்க் கொலை புரிந்துவிட்டனர். . . . ... • அந்தோ! மாரியனேய பாரி மறைந்துபோனன் ; அவன் மறைவுகேட்ட பாணர் பரிந்தனர்; வயிரியர் வருங் தினர்; இாவலர் எங்கினர்; கபிலர் கண்கள் கடல்களாயின; பாரிஇல்லா வாழ்வு, பாலகில வாழ்வுபோல் பாழ் என எண்ணினர்; அவர் பாரியை இழந்து வாழ விரும்பவில்லை : அவரும் அவனத் தொடர்ந்து உயிர் இழக்கவே விரும்பி ர்ை. ஆனல், தன்பால் வந்து இரங்துகின்ற மன்னர் களின் மனக் கருத்தறிந்த பாரி, இனி, தான் உயிர் வாழ்தல் இயலாது என்பதனை உணர்ந்தவனகி, உயிர்த்தோழர் கபிலரை அழைத்து, 'புலவர் பெருந்தகையே! இனி நான் துயிர் வாழேன்; அது குறித்து நான் மனங்கவலேன்; என் பிரிவினைப் பொருது உயிர் விடாதிருக்கத் தங்களே வேண்டு கிறேன்; தாங்கள் இன்னும் சிலநாள் வாழவேண்டும்