பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 க பிலர் புலந்தனை ஆகுவை புரந்த யாண்டே, பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது, ஒருங்குவரல் விடாது, ஒழிக’ எனக்கூறி இனையை ஆதலின், நினக்கு மற்றுயான் மேயினேன் அன்மையானே; ஆயினும் இம்மை போலக் காட்டி, உம்மை இடையில் காட்சி நின்னோடு உடனுறை வாக்குக உயர்ந்த பாலே.” (புறம் உங்க) கபிலர் உயிர் வாழ்வதற்குப் பாரியின் வேண்டு கோளேயன்றி, வேறு சில கடமைகளும் காரணமாம்; மறைந்த பாரிக்கு மகளிர் இருவர் இருந்தனர்; இளமையும் ஈடிலா அழகும் உடையார்; மனப்பருவம் எய்திய மங்கை யர்; கந்தையின் பிரிவுத் துயரைத் தாங்கமாட்டாது நொந்த உள்ளத்தினர். ஆதரவு அற்ற அவர்களுக்கு அருங் துணையாய் இருந்து, அவரைத் தக்கவர்க்கு மணம் செய்து வைத்தல், அவர் கங்தையின் தோழனுகிய தம் கடனே என்று உணர்ந்தார் கபிலர்; அதனுல், அவர்க்கு மணம் செய்து மகிழும் வரையில் மண்ணுலக வாழ்வை மறுப்பது கூடாது என மனத்துணிந்தார். h பாரியை இழந்து பாழ்பட்ட பறம்பில் இருந்து வாழ்தல் இனிக் கூடாது என்று எண்ணி, அவன் மகளிரை *யும் அழைத்துக்கொண்டு பறம்புங்ேகிச் செல்வாராயினர். பறம்பு நீங்கிச் செல்லும் அவர், 'வந்தோர்க்கெல்லாம் வகை வகையான சுவைகொண்ட உணவளித்துப் பேணிய பறம்பே யுேம் பாரியை இழந்தன; நாங்களும் அவன் பிரிவுகண்டு செயலற்ருேம்; இன்று கண்கள் நீர் ஒழுக சின்னே வணங்கிப் பிரிந்து செல்கிருேம்; எம்மை இன்று வரை புரந்த பறம்பே! நீ வாழி! மழை தொழில் மறப் பினும், இயற்கை வளத்தில் என்றும் குன்ருக் குன்றே! ...நீ வாழி! உழுது பயிரிடுவோர்க்கு உறுபொருள் அளித் துப் புரக்கும் விாேகிலம் பல்கொண்ட பறம்பே! நீ விழி! பாறையும் சிறு குன்றுமே கசையாய் அமையப் பிறைபோல் வளைந்த உண்ணுர்ேக் குளங்களால் கிறைந்த பறம்பே