பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 க பி லர் மன்னன்; பகைவர்களோ, பேரரசர்கள் பறம்புமலை ஒன்றைக் கைப்பற்ற, மூன்று பேர் அரசரின் பெரும்படை! அவர்கள் படையில் கலந்துவந்துள்ள குதிரைகள்தான் எவ்வளவு ! ஒன்று, இரண்டு....அம்மம்ம எண்ணிக் காணவே இயலாதுபோலும் ' என்றெல்லாம் கூறிக் கூறிச் சிரித்தனர். அக்காட்சியைக் கண்டு களித்த கண்களால், அவர்கள் குப்பை மேடேறி உப்புவண்டி எண்ணும் இந்தக் காட்சியையும் காணநேர்ந்ததே ' என்று எண்ணினர்; துயர் மிகுந்தது ; அந்தோ ! என்று கூறி அழுதார். 'குப்பை ஏறி உமணர் . உப்பொய் ஒழுகை எண்ணுய மாதோ கோகோ யானே : தேய்கமா காலே!... அண்ணல் கெடுவரை ஏறித், தந்தை பெரிய நறவின் கூர்வேல் பாரியது அருமை அறியார், போரெதிர்ந்து வந்த வலம்படு தானே வேந்தர் . . . - பொலம்படைக் கலிமா எண்ணு வோரே. (புறம்: க.கசு) அழுகையொலி கேட்டு அங்கு வந்த மகளிர் இருவரும் புலவர் புலம்புவது கண்டனர்; இதுகாறும், அவர் உறு துணையால் தங்கள் துயரை ஒருவாறு மறந்திருந்தனர்; இப்போது அவர் துயர் உறுவது காணவே, இவர்களும் துயருற்றனர்; கங்கள் தந்தையோடு வாழ்ந்த வாழ்வை எண்ணினர். சென்ற முழு கிலா அன்று எங்கள் பறம்பில் எங்கள் தந்தையோடிருந்து மகிழ்ந்தோம்; இன்றும் முழு கிலா நாள்தான் : ஆளுல் இன்று? எங்கள் தந்தை எங்க ளோடில்லை; அவரை இழந்துவிட்டோம்; எங்கள் குன்றும் பகைவர் கைப்பட்டுவிட்டது; பகைவர்கள் பேரரசர் கள்தாம்; ஆல்ை, அவர்கள் எங்கள் தந்தையைக் கொன்று பறம்பினேக் கொண்டது போர்புரிந்து அல்லவே! வஞ்சித்தன்ருே கொண்டனர்?’ என்று வாய் விட்டுக் அழுவாாாயினர். . - ? அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின், எந்தையும் உடிையேம்; எம் குன்றும் பிறர்கொள்ார்.