பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரும் பாரியும் 29 இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின் வென்றெறி முரசின் வேந்தர்()எம் குன்றும் கொண்டார்; யாம் எங்தையும் இலமே.” - - (புறம் : க.க.உ) பாரியை கினேந்து புலம்பிக்கொண்டிருந்த புலவர் பெருந்தகையார், அவன் மகளிரின் அழுக்ையொலிகேட்டு உணர்வுற்ருர்; அம் மகளிர்க்கும் அறிவுரைகள் பல கூறித் தேற்றினர். செல்வ வாழ்விலே சிறக்க வாழ்ந்த இவர்கள், இவ்வாறு தனிமையில் வாழகேரின், அவர் உள்ளம் வாடும்; தனிமை, துயர் வளரத் துணை செய்யுமன்ருே ஆகவே, உள்ளத் துயர் தீர்க்கும் உறுதுணையே அவர்களுக்கு இப் போது தேவை: தர்ய் தந்தையர்க்குப்பின், மகளிர்க் உறுதுனேயாவார் அவர் கணவரே ; ஆதலின், இம் மக ளிர்க்கு விரைவில் மணம் முடித்தல் வேண்டும்,' என்று க்ருதினர். உடனே பாரியின் பெருமைக்கும், இம் மக ளிரின் அருமைக்கும் ஏற்ற ஆண்மகனேத் தேடிக் காண வேண்டிய கடமையைக் கபிலர் மேற்கொண்டார்.