பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. கபிலரும் விச்சிக்கோவும் விச்சி என்ருெரு Lడి உண்டு; அதைச் சூழ இருந்த நாடு விச்சிநாடு எனப்படும்; அம் மலையையும், அங்காட் டையும் விச்சியர் என்ற ஒர் அரச இனத்தார் ஆண்டுவந்த னர்; அவர்களிடத்தே விற்போர் வல்ல வீரர் நிறைந்த பெரும்படையுண்டு; விச்சியர் குலத்தில் அப்போது விச் சிக்கோ என்ற பேரரசன் ஒருவனும், இளவிச்சிக்கோ என்ற சிற்றரசன் ஒருவனும் இருந்தனர்; விச்சிக்கோ வாட்போர் வல்லவன்; அவன் வாளேந்திக் களம் புகுந் கால், அவனே, எவர்க்கும் வணங்கா மன்னரும் வணங்குவர்; அவனுக்குப் பணிந்து திறைகொடா மன்னர் எவரும் இார்; அவன் ஆற்றலையும், குடிப்பெருமையையும் கபிலர். அறிவார்; மேலும், கடையெழு வள்ளல்களுள் ஒருவகிைய கண்டீரக்கோப்பெருநள்ளியோடு தொடர்புடையவனுக வும் காணப்பட்டானகவே, இவனும், அவனைப்போன்றே பேருள்ளம் படைத்திருப்பான் எனவும் எண்ணினர்; இவ்வாறு குலத்தாலும், குணத்தாலும், கொடையாலும், கொற்றத்தாலும் சிறந்து விளங்கிய விச்சிக்கோ, பாரி மகளிரை மணக்கும் தகுதியுடையவனே என்று கருதினர். உடனே, மகளிரையும் உடனழைத்துக்கொண்டு அவன். பால் சென்ருர்; அவனேக் கண்டு, விச்சிக்கோவே! இவ் விள மங்கையர் இருவரும், முல்லைக்குத் தேரீந்த வள்ளி யோன் மகளிர்; நான் ஒரு பரிசிலன்; மேலும் அந்தணன்; ஆகவே, கேட்கவும், கொடுக்கவும் உரிமை உடையேன். நான்; இவரை மணந்துகொள்ளத் தக்க மாண்புடையாய் நீ என உணர்ந்தேன் ஆகவே நான் இவர்களைத் தருகிறேன்; ஏற்று மணந்து இனிது வாழ்க!” என்று வேண்டினர். ஆனல் அவர் வேண்டுகோள் வீணுயிற்று; பேரரசர் மூவர்க்கும் பகைவனுகிய பாரியின் மகளிரை மணந்து கொண்டால், அவ்வரசர் பகைப்பர் என அஞ்சியோ, அம் மகளிரின் சீர் அழிந்த செல்வ நிலை கண்டு நாணியோ, அம் மகளிரை மணக்க விச்சிக்கோ மறுத்துவிட்டான். -