பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sr, . கபிலரும் - இருங்கோவேளும் விச்சிக்கோன்பால் விடைபெற்ற கபிலர், பாரிமகளிர் பிறந்த வேளிர் மரபிலேவந்த இருங்கோவேள் என்பா னிடம் சென்ருர் வட நாட்டில் ஒரு முனிவன் செய்த வ்ேள் வியில் தோன்றி, அகத்தியர் தமிழ்நாடு. வந்தபோது அவர் அழைக்க அவருடன் வந்த பதினெண்வகை வேளி ருள் ஒருவ்ன், துவரை என்ற ஊரிலிருந்து நாடாண்டு வங் கான். அத் துவரை, மைசூருக்கு வடமேற்கே ஐம்பது கல் தொலைவில் உளது; துவர்ாபதி எனவும் துவார சமுத் திரம் எனவும் வழங்கப்பெறும்; இப்போது, பழைய வீடு எனப் பொருள்படும் ஹளெபீடு என்ற கன்னடப் பெய ரால் அழைக்கப்படுகிறது. அவ்வாறு வந்த அந்த வேளிர்மரபில் நாற்பத் தொன்பதாம் தலைமுறையில் பிறந்தவன் இந்த இருங்கோ வேள். இருங்கோவேளுக்குப் புலி கடிமால் என்ற மற்ருெரு பெயரும் உண்டு; வேள்.குல அரசர்களுள் சளன் என்ற பெயருடையான் ஒருவன் இருந்தான்; அவன் ஒருநாள் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தான்; அப்போது, ஆங்கே தவம் செய்து கொண்டிருந்த ஒரு முனிவரைப் புலி ஒன்று தாக்க நெருங்கியது; அதுகண்டு அஞ்சிய முனிவர், அருகே வேட்டையாடிக்கொண்டிருந்த சளனேக் கூவி, ‘புலியைக் கொல் சள் கொல் சள!” என்று பொருள்படு மாறு பொய் சள!'பொய் சள!’ என்று கூறினர்; அவனும் அக்கணமே அம்பெய்து அப் புலியைக் கொன்ருன்; அவன் செயல்கண்டு மகிழ்ந்த முனிவர், சளன.அருகில் அழைத்து, ‘அரசே! நின் வெற்றி கண்டு மகிழ்ந்தேன்; இவ் வெற்றிப் புகழ் கின்று விளங்க, இன்றுமுதல் கின்மரபு, பொய்சள மரபு என்ற பெயர் பெறுக,” என்று வாழ்த்தி அனுப் பினர். அப் பொய்சள மரபோடு தொடர்புடைய வேளிர் மரபிலே வந்தவன் ஆதலின், அவ்வெற்றியை கினைப்பூட் டிச் சிறப்பிக்கும் வகையால் இருங்கோவேள், புலியை வென்ற பெரியோன் என்று பொருள்படுமாறு, புலிகடி