பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரும் இருங்கோவேளும் 33 உன்போலும் அறிவு படைத்த உங்கள் முன்னேன் ஒருவன் இகழ, அதுகண்டு அவர் சினந்து நோக்க, அதல்ை உங்கள் அரையப் பேரூர் அழிந்துபோனதை மறந்தேன்; அவன் வழிவந்த உன்னிடம்மட்டும் உயர்ந்தோர் ஒழுக்கம் எவ் வாறிருக்கும் கின்னேப் பழித்துப் பயன் என்? அது கின் குலப்பண்பு அப் பண்புணராது, உன்னே வந்து கண்டு வேண்டுகோள் விடுத்த நானே அறிவிலி! வருகிறேன் ; வேளே! வாழ்க நீ ஊழி! வெல்க கின்கொற்றம்!” என்று உளந்துடிக்கப் பேசி வெளியேறினர் கபிலர். இரு இடங்களில் தம் சொல் ஏற்கப்படாதது காணக் கபிலர் உள்ளம் நாணிற்று. எம்புகழ் பாடமாட்டாரா கபிலர் ! எம்மைவந்து காணமாட்டாரா கபிலர் ! என்று பேரரசர்களாலும் விரும்பப்படும் நான், குறுநில மன் னர்களால் இகழப்பட்டேனே,” என்று வருந்தினர். எங் கும் சென்று எவரையும் இரந்து கிற்கும் இயல்பினன் நான், என் சொல் ஏற்கப்படாமை கண்டு வருந்தவில்லை; இவர்கள்-பெருங்கொடை வள்ளல் பாரியின் மகளிர்இகழப்பட்டனரே! என்றே வருந்துகிறேன். தந்தை இருந்தால், தங்களே மணக்க விரும்பி, தங்கள் பறம்பு நோக்கி வரும் இளவரசர் கூட்டத்தைக் கண்டு களிக்க வேண்டிய இவர்கள், தங்கள் கால்கடுக்க, பிற அரசர் அவைக்களம் ஏறி அவமானப்படவந்ததே அதுகான அன்ருே என் கண்கள் நானுகின்றன? இத்தகைய இழி குணம் மிக்க இளைஞர்களிடத்தே இனிச் செல்லேன்; என் சொல் செல்லும் இடமாய், இவர்க்கும் ஏற்ற இடமாய்க் கண்டே செல்வேன். அவ்வாறு செல்லும்போதும் நான் மட்டும் தனித்துச் செல்வேனே அல்லாமல், இணக்கம் அறிவிக்கா அரசர்முன் இவரையும் அழைத்துச் செல் லேன்,' என்று முடிவு கொண்டார். - அத்தகையான் ஒருவனேக் தேர்ந்து, அவன் ஒப்புதல் பெற்று வரும்வரை இவரைத் தக்கார்பால் ஒப்படைத்துக் செல்லுதல் வேண்டும் என்று எண்ணினர். மலையமான் காட்டுத் திருக்கோவலூர் செந்தண்மை மிக்க அந்தணர் க.-8