பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 க. பி ல ர் என இவன் சிறப்பிக்கப்படுதல் காண்க. நன்கு தேர்ந்த நால்வகைப் படையினைப் பெற்ருன் ; அவன் வீரரும், அவ. னேப்போன்றே வீரமும் மானமும் ஒருங்கே பெற்றவ ராயினர். போர்க்குறிக் காயமே புகழின் காயம்; அது புண் அன்று; புகழின்கண் என்ற எண்ணமுடையார் அவர் ; வாள்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர் என அவர் முகப்புண் புலவர்களால் பாராட்டப் பெறும்; பகை வர் கோட்டையைப் பற்ருமுன் உண்ணவும் மாட்டோம் . என உறுதிமொழி உரைத்துக் கோட்டையைப் பிடிக்க நாள் பலவாயிலும் அதுவரை உண்ணுதிருந்தே உள்ளியது முடிக்கும் உரனுடையார்; பகையரசர் ஊர்ந்து செல்லும் பட்டத்து யானையைக் கொன்று கைக்கொண்ட அதன் கொம்பை விலையாகக் கொடுத்துப்பெற்ற கள்ளையே உண் ஆணும் உறுதியுடையார். இத்தகைய வீரம் மிக்க பெரும் படையினைப் பெற்றிருந்த காரணத்தில்ை, ஒரே களத்தில் சோழ, பாண்டியாகிய இரு பெரு வேந்தரை வென்று சிறந்தான் செல்வக்கடுங்கோ. பிற அரசர்களை வென்று வீறுபெற்றவர்கள் எல்லாம் இவனுடன் போரிட்டுத் தோற்று, இனி நாங்கள் நின்படை சேர்ந்து வின் ஆணே வழி நிற்போம் என்று சூளுரைத்துப் பணிந்து வாழ்வர். இவ்வாறு பெருவீரய்ை, பெரும்படை உடையணுய் இருக் தமையால், பகைவர் திறைதந்தாலன்றி வஞ்சினம் தனியா விானப் விளங்கி,_போர் பல வென்று விழுப்புகழ்பெற்று 'விளங்கினன் வாழியாதன். - செல்வக்கடுங்கோ பெருவீானதலோடு, சிறந்த கொடையாளனுகவும் காணப்பட்டான்; அந்தணர்க்கு அருங்கலங்களே அளிக்குங்கால், அப் பொருளோடு அவர் கிையில் வார்த்த நீர் ஒடிய்ே அவன் அரண்மனை முற்றம் சேறுபட்டிருக்கும். தன்னைப் பாடிவரும் பாணர் முதலி யோர்க்குப் பகையரசர் திறையாகத் தந்த யான்கள் அளிப்பதோடு, அளக்கும் மரக்காலின் வாயும் தேய்ந்து போகுமாறு நிறைய அளக்க தெற்குவியல் பலவும் அளிப் பான் தொன்று திறைதந்த களிற்றெடு, நெல்லின், அம்.