பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரும் கடுங்கோவாழியாதனும் 37 பண அளவை விரித்து உறைபோகிய, ஆர்பதம் நல்கும் என்ப. தன் புகழ் பாடிவரும் கூத்தர் முதலியோர், தன் அரண்மனை நோக்கி வருவதை வெகு தொலைவில் கண்ட போதே, அவர்களுக்குத் தேரும் குதிரையும் அளித்து அனுப்புக' என்று எவலர்க்கு ஆணையிடும் அருள் உள் ளம் உடையான் ; புறஞ்சிறை வயிரியர்க் காணின், வல்லே எஃகுபடை அறுத்த கொய்சுவல், புரவி அலங்கும் பாண்டில் இழை அணிந்து ஈம்’ என்னும் ஆணுக் கொள்கை பன் என இவன் புகழ் பாடுவர் புலவர். இவனைப் பாடி வரும் எவரும் தென்கடல் முத்தொடு நன்கலம் பல பெற்றே திரும் புவர். கொற்றமும் கொடையும் சிறக்கப்பெற்ற செல்வக் கடுங்கோ சிறந்த பல குணங்களும் பெற்றவணுவன் ; விளை யாட்டே வினையாம் ; ஆகவே, குற்றம் எதையும் விளை யாட்டாகவும் செய்தல் கூடாது ; நகையுள்ளும் இன்னது; “நகையேயும் வேண்டற்பாற் றன்று என்பர் வள்ளுவர்; வாழியாதன் விளையாட்டாகவும் பொய்கூறி யறியான். புறங்கூறுவோன் பூமிக்குப் பாரமாவான்; அவனே உலகில் வாழவிடல் கூடாது; ஆல்ை பொறுமையில் சிறந்தது பூமி, பொறுப்பது பூமிக்கு அறம் ; ஆகவே, அவ் வறம் கருதியே பூமி அவனைப் பொறுக்கிறது, என்று கூறிப் புறங்கூறுவான் கொடுமையை விளக்குவர் வள்ளுவர்; ஆகவே, புறங்கூறப் பார்த்திருத்தல் கூடாது; அதிலும் பகைவன் புறங்கூறுகிருன் என்ருல், அவனே வாழவிடுதல் கூடவே கூடாது; ஆல்ை, செல்வக் கடுங்கோ, பகைவர் புறங் கூறுகின்றனர் என்பதைக் கண்டும் பொறுத்திருப் பன். அவர் என்னேப்பற்றிக் கூறுவதெதையும் என் எதிரில் கூறல் வேண்டும்; புறத்தே கூறுகின்றனர்; அதற்கு அவர்க்கு என்பால் உள்ள அச்சமே காரணம்; என்னேக்கண்டு அஞ்சும் அவர் ஆண்மையற்றவர் ; ஆண்மை யற்ற அறிவிலி கூறுவதெதையும் மனத்தில் கொள்ளேன்,' என்று அமைதிகொள்ளும் சிறந்த அறிவுடையான்