பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 க பி ல ர் ' கையிலும் பொய்யா வாய்மை பகைவர், புறஞ்சொல் கேளாப் புரை தீர் ஒண்மை,” என அவன் புகழ் பாடுவர் புலவர். செல்வக்க்டுங்கோ, பார்ப்பாரை அன்றிப் பகை வரைப் பணிந்தறியான் ; அஞ்சா உள்ளமுடைய அவன், 'அஞ்சுவது அஞ்சாமை பேதைமை, என்பதை அறிந்தவ குதலின், நண்பர் அறிவுரை கண்டு அஞ்சும் அறிவுடையான்; உலகமே கிலைமாறி அழிவதாயினும், முன்னர்க் கூறிய தொன்றைப் பின்னர் அவ்வாறு கூறினேன் அல்லேன்' என்று பொய் கூறி மறுக்கும் மதியுடையானல்லன்; ' பார்ப் பார்க் கல்லது பணிபறி பலேயே, பணியா உள்ளமொடு அணிவரக் கெழிஇ, நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலேயே கிலத்திறம் பெயரும் காலையாயினும், கிளந்த சொல் நீ பொய்ப்பறி யலேயே,’ என இவன் புகழ் எல்லாம் கூறிப் பாராட்டுவார் கபிலர் தன்னல் அரசிழந்து அழிவுற்ற நாடுகளில் வாழும் அந் நாட்டு மக்கள், பண்டேபோல் வள முற்று வாழ வழி பல செய்து அளிக்கும் அருளுடையான் ; மேலும்.வேள்வி பல செய்தவன் ; வேதம் அறிந்தவன். வாடும் சுற்றத்தின் வறும்ை நீங்க வழி காணுது வருந்தும் கபிலர், செல்வக்கடுங்கோ இவ்வாறு சிறந்தோ குதலை அறிந்தார்; கடுங்கோவாழியாதனேக் கண்டு பரிசில் பெற்று வந்த சிலர், கடுங்கோவாழியாதன் வந்தோர்க் கெல்லாம் வழங்கும் வள்ளல்; வாரிவாரிக் கொடுத்துவிட். டோமே என்று வருந்தான் ; பொருள் கொடுக்கக் கொடுக் கப் புகழ் பெருகுவது கண்டு மகிழ்ந்து மனச் செருக் கடையா மாண்பினன்; வழங்க, வழங்க அவன் வள் ளன்மை வளர்ந்தே தோன்றும்,” என்று அவன் புகழ் கூறி, அவரை அவன்பால் செல்லவும் துாண்டினர். சேர் நாட்டுத் தலைநகர் சென்று கபிலர் சேர்ந்தார் ; கபிலர் சென்றபோது, கடுங்கோவாழியாதன் தலைநகரில் இருந் திலன்; படையுடன் பாசறையில் உள்ளான் என்று. அறிந்து அங்கே சென்று, அவனேக் கண்டு, சேரலர் கோவே நிலையில் தாழ்ந்து கின்னேக் காண வந்தவனல்லன் கான் ; பாரி எங்கள் தலைவன், முரசு முழங்குதல் ஒழித்த