பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 க பி ல் ர் பெரும் புலவராகிய கபிலர் தன்பால் வருதலையே பெருமையாகக் கருதிய சோமான், அவர் பாக்கள் பல பாடிப் பாராட்டியது கண்டு அளவிலா மகிழ்ச்சி கொண் டான். வருவதற்கு முன்பே வழங்கும் வள்ளியோனகிய அவன், கபிலர், தம்மை வாட்டும் வறுமையினைக் காட்டிய பிறகும் வாளா இருப்பனே? அவர் சுற்றத்தின் வறுமை யினை அகற்ற, சிறு பரிசாக, நூருயிரம் காணம் அளித் தான்; (காணம் என்பது சேரநாட்டு நாணயம்; 8 கழஞ்சி அல்லது 1; பணம் இப்போது காணம் என வழங்குகிறது.) அவன் அம்மட்டோடு அமைதி கொள்ள விரும்பவில்லை : கபிலரை உடன்கொண்டு நன்ரு என்ற குன்றின்மீது ஏறி கின்ருன்; அங்கிருந்து காண்பார் கண்ணிற்குப் புலப்படும் நாடுகள் எவ்வளவுண்டோ அவ்வளவையும் அவர்க்கே அளித்தான் ; (சேலம் மாவட்டம் ஊற்றங்கரைத் தாலுக் காவின் தென்பகுதியில், மஞ்சவாடிக் கணவாயின் வடக்கே உள்ள தேனன்ருமலை என வழங்கும் மலேயே அந் நன்ரு மலே என்பர்.) பொருள் பெற்று மகிழ்ந்த புலவர், செல்வக் கடுங்கோவொடு சிலநாள் மகிழ்ந்து வாழ்ந்துவந்தார். ஒருநாள் கபிலர் கையைப்பற்றிய கடுங்கோவாழி யாதன், அவர் கை மெலிந்திருப்பது கண்டு, ' புலவர் பெருந்தகையே! என் கையைப் பாருங்கள்; எவ்வளவு வன்மையுற்றிருக்கின்றன: தும் கைகள் மட்டும் இங்கனம் மென்மையாயிருப்பானேன்?’ என்று கேட்டான். உடனே கபிலர், செல்வக் கோவே பகைவர் வாயிலைப் பாழாக்கு மாறு யானைகளே எவவும், பின்னர் அவற்றை அடக்கி ஆளவும் ஆளும் அங்குசத்தைப் பிடித்துப் பழகியதாலும், பகைவர் கோட்டை நோக்கிப் பாய்ந்தோடும் குதிரைகள், அக் கோட்டையைச் சூழ உள்ள அகழியில் வீழ்ந்து ஆழ்ந் கிடாவண்ணம், அவை அகழி அருகே வந்ததும், அவற்றின் விரைந்த ஒட்டத்தை வலிந்து அடக்குவதாலும், வில்லைக் கையில் ஏந்தி எய்யும் அம்பு விரைந்து பாயுமாறு நாணை வலிந்து இழுப்பதாலும் வருகின்ற பரிசிலர்க்கெல்லாம் வாரி வாசிப் பொருள்களை வழங்குவதாலும், சின் கைகள் வலுப்