பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலரும் கடுங்கோவாழியாதனும் 41 பெற்று விளங்குகின்றன; ஆனல், எம்போன்ற புலவர்கள் செய்யும் தொழில் என்ன? புலால் காறும் கறியைப் புகையில் கொளுத்திப் பெற்ற ஊனேயும், துவையையும், கறியையும், சோற்றையும் கலந்து உண்டு வருந்தும் தொழி லன்றி வேறு தொழில் இல்லையன்றே அதலைன்ருே, எம் போன்ற புலவர் கைகள் இவ்வாறு மெலிந்து உள்ளன.” என்று கூறிக் கடுங்கோவின் கைவன்மையும், வண்மையும் ஒருங்கே தோன்றப் புகழ்ந்து பாடினர். ' கடுங்கண்ண கொல்களிற்ருல் காப்புடைய எழுமுருக்கிப், பொன்இயல் புனேதோட்டியால் முன்புதாந்து சமந்தாங்கவும், பாருடைத்தகுண்டகழி நீர்அழுவ சிவப்புக் குறித்து கிமிர்பரிய மாதாங்கவும், ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசைச் சாவ நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும், பரிசிலர்க்கு அருங்கலம், நல்கவும், குரிசில் வலிய வாகும் கின் தாள்தோய் தடக்கை ! புலவு காற்றத்த பைந்தடி பூநாற் றத்த புகைகொளிஇ, ஊன்துவை, கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது பிறிதுதொழில் அறியா ஆகலின், நன்றும் மெல்லிய பெரும!...... சிற்பாடுநர் கையே. (புறம்: கச) இவ்வாறு அவன் புகழ் தோன்றப் பாடல் பல பாடி வாழ்ந்திருந்தார். - கடுங்கோவின் அன்பு எத்துணைச் சிறந்து தோன்றி லும், பழம்பெரும் நண்பனுகிய பாரியின் பிரிவுத்துயரும், அவன் மகளிர்க்குத் தான் செய்யவேண்டிய அருந்தொண் டும் கபிலரை அங்கிருந்தும் பிரியச் செய்தன. அவன்பால் தாம் பெற்ற அரும்பொருளேத் தம் பின் வரும் சுற்றத் தார்க்கு அளித்துவிட்டு, அவனே வாழ்த்தி விடைபெற்க்று கொண்டார்.