பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. கபிலர் மறைவு சேரர் தலைநகர்விட்டுப் புறப்பட்டபொழுதே பாரி மகளிரின் மணவினயைக் குறித்து எண்ணலாயினர். ‘மகளிரை மணக்க மறுத்தனர் அரசர் இருவர் ; அவர்கள் மறுத்தது, மகளிர் மணத்திற்கேற்ற மங்கையர் அல்லர் என்ரு ? அன்று ; பாரியின் பகைவர் பேரரசர் மூவர் என்ற அச்சமே அவர்கள் மறுத்தற்குக் காரணம்; மூவேந்த ரைக் கண்டு அஞ்சும் ஆண்மையிலா அரசர் எவரும் இவரை மணக்க இசையார் ; ஆகவே, அவரைக் கண்டு அஞ்சா ஆண்மையாளர் யாவர் எனத் தேர்ந்து அவர்பால் செல் வதே நன்று ' என்று எண்ணினர். தமிழ்நாட் டாசர் அனைவருள்ளும், அவ் வேந்தரைக் கண்டு அஞ்சா ஆற்றல் வாய்ந்தவர், மலேயமான் நாட்டு அரசர்களே என்பதை அறி வார் ; அவர்கள், அவரைக்கண்டு அஞ்சாமை மட்டுமன்று : அவர்க்குத் துணைபோகும் அளவு ஆற்றலும் வாய்ந்தவ சாவர். ஆகவே, இவரை மணப்பதால் அவர் பகைப்பரே என்ற அச்சம் மலேயர்க்கு உண்டாகாது. மேலும், மலை யர் புலவர்க்கு மதிப்புத் தரும் மாண்பினர்; மலையமான் திருமுடிக் கர்ரியைக் காணச்சென்று அவைேடு வாழ்ந்த சில நாட்களில் அவ்வரசர் பண்பெலாம் கபிலர் உணர்ச் கிருந்தார். ஆகவே, பாரி மகளிரை மணக்கும் மனமும், மறமும் ஒருங்கே பெற்றவர் மலைய மன்னர்களே என்று அணிந்து மகிழ்ந்து மலையமானுட்டுத் தலைநகர் திருக்கோவ ஆார் சென்று சேர்ந்தார். அப்போது அந் நாடாண்டிருந்த வர் மலேயமான் கிருமுடிக்காரியின் மக்கள் இருவர் ; மங்கையர் இருவர் இருப்பதற்கேற்ப, மலையமாலுக்கும் மக்கள் இருவர் இருப்ப்து கண்டு மகிழ்க்கார் ; கபிலர் அவர்களைச் சென்று கண்டார்; தந்தைவாழ் காலத்தில் வந்திருந்தபோதே கபிலர் பெருமையை அறிந்தவராதலின், அன்புடன் வரவேற்றனர். அவர்களிடத்தே தம் உள்ள விருப்பத்தைக் கபிலர் உணர்த்தினர்; புலவர் வேண்டுவன அறிந்து அளித்துப் புரக்கவல்ல அவர்கள், மனங்கொள்.' என மங்கையர் இருவரை அவர்களே அளிப்பர் எனில், அதை மறுப்பரோ? மலையர் இருவரும் மணவினைக்கு