பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் பாராட்டைப் பெற்றவர்கள் 45

  • ஒரிக் கொன்ற ஒருபெருங் தெருவில்

காரி புக்க நோார் புலம் போல்.” (நற்: க.உ0) நள்ளி :-கடையெழு வள்ளல்களில் கள் வளி யும் ஒருவன்; கண்டீரக்கோப் பெருநள்ளி எனவும் அழைக்கப் பெறுவான்; தன்பால் வந்து இாந்து கிற்போருக்கு அழகிய நெடிய தேர்களையும், பெரிய யானைகளேயும் பரி சாகக் கொடுக்கும் இயல்புடையான். மழைபோல் கொடுக் கும் கையான்; பாய்ந்தோடும் குதிரைப் படையுடையான் ; அவன் மலை மணம் வீசும் காந்தள் மலர் கிறைந்தது. 'இாப்போர்க்கு . இழையணிநெடுந்தேர் களிருெடென்றும் மழை சுரந்தன்ன ஈகை வண்மகிழ்க் கழல்தொடித் தடக்கைக் கலிமான் நள்ளி.’ (அகம்:உக.அ) அகுதை :-அகுதை, கூடல் நகரை வாழ்விடமாக் கொண்டவன்; கூடல் அவன் வாழ்விடம் அன்று; அவன் ஆட்சி செலும் இடம் என்பாரும் உளர்; பேராற்றல்மிக்க பெரு வீரன்; சிறந்த கொடைக் குணமும் உடையான். எறிந்திலே முறிந்த கதுவாய் வேலின் மணநாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டுநீர் வாைப்பின் கூடல். ' (புறம் : டசஎ) கழாத்தலையார் :-கபிலருக்கு முற்பட்டவர் கழாத்தலே யார் ; கழாத்தலையார், ஊரால் பெற்ற பெயர். கழாத்தலை என்ருேர் ஊர் உண்டு; அவ்வூரில் வாழ்ந்தவர் ஆதலின் இவர் அப் பெயர் பெற்ருர். இருங்கோவேளின் முன்னேன் ஒருவன் இவரை இகழ்ந்தமையால், அரையம் என்ற அவன் நகர் அழிவுற்றது என்று கூறிக் கழாத்தலையாரின் புலமைச் றப்பைக் கபிலர் பாராட்டுவார்; இவர்பாக்கள் புலவர் பலராலும் பாராட்டப்பெறும் பண்பு வாய்ந்தன. நம்போல் அறிவின் துமருள் ஒருவன் புகழ்ந்த செய்யுட் கழாஅத் தலையை - இகழ்ந்ததன் பயனே.” - (புறம்: e-oa.)