பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. கபிலர் வாழ்க்கைநிலை கபிலர் நீண்டதோர் வாழ்நாள் பெற்று வாழ்ந்தவ ராவர். மலையனக் கண்டு பாராட்டி, ஆரிய அரசனுக்கு அறிவூட்டி, பேகனை, அவன் மனேவியால் செல்லப் _iந்துப் பாராட்டி, பறம்பு நாடு செல்லவே பல ஆண்டுகள் ஆகியிருக்கும். பறம்பு மலையில் அவர் வாழ்ந்த ஆண்டுகள் பலவ. தல் வேண்டும். பின்னர் பாரி மகளிர் ம்னமுயற்சியில் சில ஆண்டுகள் சென்றிருக்கும்; செல்வக் கடுங்கோவுடன் சேர நாட்டிலும் சிலகாலம் வாழ்ந்துள் ளார்; அங்கிருந்த மீண்டு பாரிமகளிர்க்கு மணவினை முடித்தி வைத்துள்ளார்; இம் முயற்சிக்காகவும் அவர் வாழ் இான் சிறிது கழிந்துளது; இவ்வளவு நீண்ட நாள் வாழ்ந்து, இவ்வளவு உழைக்க பின்னரும் அவர் உயிர் இயற்கையிற் பிரியக் காணுேம்; தம் உயிரை வடக்கிருந்து வலிதின் முயன்றே போக்கியுள்ளார் ; ஆகவே, சல்லுடல் பெற்று நீண்டநாள் வாழ்ந்தவர் கபிலர் என்பது புலனும், கபிலர் தம் வாழ்நாளில் பெரும் பகுதியைப் பாரியின் பறம்பானிலேயே கழித்துவிட்டார் என்ருலும் அவர் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் சென்று வந்துள்ளார் என்ப்து அவர் பாடல்களால் விளங்குகிறது. கபிலர், மலாடு நாட்டு மலையனேயும், அவன் முள்ளுர் மலையையும், பாண்டி நாட்டுப் பாரியையும், அவன் பறம்பு மலையையும், சேர நாட்டுச் செல்வக் கடுங்கோவையும், அந் நாட்டு அயிரை, கேரி, கொல்லி ஆகிய மல்ேகளயும் அறிந்து பாடி யுள்ளார். ஆகவே, அவர் தமிழகத்தின் முப்பெரு நாடு களுக்கும் சென்று பழகியவர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. . . . . - கபிலர் வாழ்க்கை செல்வம் கிறைந்து செழித்து விளங்கவில்லை. வறுமையில் கிடந்து வருக்கி வாழ்ந்தவரே; பேரரசர்களையும், பெருங்கொடை வள்ளல்களையும் பெரு நண்பர்களாகக் கொண்டவர் கபிலர் ஆதலின், விரும்பியிருந்தால் கபிலர் செல்வ வாழ்விலே வாழ்ந்திருக்க