பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் பெருமை 49 கொணர்ந்த செயலைப். பாராட்டியுள்ளார். மாருேக்கத்து நப்பசலையார் என்ற பெண்பாற் புலவர், கபிலரைப் 'புலன ழுக்கற்ற அந்தணுளன்' எனவும், பொய்யா நாவிற் கபிலன்’ எனவும் பாராட்டியதோடு கில்லாமல், கபிலர் பாக்களின் சிறப்பையும் அழகிய ஒர் உவமையால் பாராட் டிப் புகழ்வாராயினர். கபிலர் பார்ட்டைப் பெற்றவர்களைப் பிற புலவர் பாராட்டல் இயலாது; கபிலர் பாராட்டு அவ்வளவு சிறப்புடையது ; பொன்னே ஏற்றி வந்த பெருங் கப்பல் வந்து தங்கிய துறைமுகம் ஒன்றினுள், பிறபொருள் ஏற்றிவரும் சிறு கப்பல்கள் புகுவதைத் துறைமுகக் காப் பாளர் அனுமதியார்; அதைப்போல், கபிலர் பாராட்டைப் பெற்றவர்கள், பிற புலவர் பாராட்டைப்பெற விரும்பார் ; கபிலர் கவிகேட்டு மகிழ்ந்தோர் காதுகளில், பிற புலவர் பாக்கள் புகா-'புலனழுக் கற்ற அந்த ணுளன், இரத்துசெல் மாக்கட்கு இனியிடன் இன்றிப், பமந்திசை கிற்கப் பாடி னன்; அதற்கொண்டு, சினமிகுதானே வானவன் குடகடல் பாலங்கரு நாவாய் ஒட்டிய அவ்வழிப், பிறர்கலம் செல்கலா தனேயேம். இது, ம்ாருேக்கத்து நப்பசலையார், கபிலர்க்கு அளித்த பெருமை. இவ்வாறு புலவர் பாடும் புகழுடையாாகிய கபிலர், கடவுட்டன்மை உடையாகவும் கருதப்பட்டுள்ளார்; மங் திரச் செய்யுளுக்கு உதாரணமாகத் தொல்காப்பிய உரை ஆசிரியர்கள் மேற்கொண்ட, 'முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி! பாண கபிலரும் வாழி' - . . என்ற செய்யுளில், கபிலர் அகத்தியர்க்கு ஒப்பவைத்து சிறப்பிக்கப்பட்டுள்ளார்.