பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. கபிலர் குணநலம் - ஒருவர் வாழ்க்கையை உணர்ந்து அவர் வாழ்க்கையில் நிகழும் பல்வேறு சிகழ்ச்சிகளே அறிந்தால்தான், அவர் குண்கலம் பலவற்றையும் அறிதல்கூடும். கபிலர் வாழ்க்கை வரலாற்றை அறிய விரும்பும் நமக்கு அத்தகைய வாய்ப்புக் கிடைக்கவில்லை. கபில்ர்ை அறிகிருேம்; அவர் பாக்களைப் பெற்றிருக்கிருேம்; ஆல்ை, அவர் வாழ்க்கை வரலாற்றை அறிய முடியவில்லை; இங்கிலையில் அவர் கவிகளில்தான் கபிலரை அறிதல் வேண்டியுளது; ஒருவர் உள்ளம், அவர் வாய்ச்சொல்லில் வெளியாகும். 'உள்ளத்தில் உண்மை பொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்.” என்பர்; ஆகவே, கபிலர் பாடல்கள் உணர்ந்து அவர் உள்ளத்தை அறிதலே நம் கடன்; அவ்வாறு அவர் பாடலைப் பார்க்கும் நமக்குக் கபிலரின் பற்பல குணங்கள் புலப்படு கின்றன. உலகிற் பிறந்தார் ஒவ்வொருவரும் பெறவேண்டிய பேறுகள், அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றுமே எனினும், அவற்றுள் பொருள் ஒன்றைப் பெற்ருலே, ஏனைய அறத்தையும் இன்ப்த்தையும் அடைதல்கூடும். வடுவிலா வையத்து மன்னிய மூன்றின், நடுவணது எய்த இருதலையும் எய்தும், ஒண்பொருள் காழ்ப்ப இயற்றி யார்க்கு எண்பொருள், ஏனே யிரண்டும் ஒருங்கு, 'அறன் ஈனும் இன்பமும் ஈனும், திறனறிந்து தீதின்றி வந்த பொருள்,' என்னும் புலவர்களின் பொருளுரைகளும் இவ்வுண்மையை உறுதிசெய்தல் காண்க. இவ்வாறு அறத்தையும், இன்பத்தையும் அடைதற்கு வழியாக விளங்கும். பொருளைப் பெருதவன், அழகு, கல்வி இவற்ருல் எத்துணேச் சிறப்புடையயிைனும், அவ்வழகும், கல்வியும் சிறந்து விளங்கா; வாழ்வின் பல பகுதியிலும், ஒருவனுக்கு இன்பம் தருவது இளமைக்காலமே, ஒருவன் இன்பம் அனுபவிக்கவேண்டியதும் அவ்விளமைக் காலமே, இளமையுடையான், அவ்விளமைக் காலத்தை இன்பமாய்க்