பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் குணநலம் 51 கழிக்க வேண்டுமாயின், அதற்குப் பொருள் தேவை; பொருள் இல்லாகவன் இளமை இன்பத்தை அனுபவித்தல் இயலாது; பொருளிலான் இளமை, இன்பம் தராது கெட் டொழியும்; வறியவன் இளமை வாடும், கலனும் இளமை யும் கல்குரவின் கீழ்ச்சாம்' என்பர் பிறரும். இவ்வுண்மை களே உணர்ந்தவர் கபிலர் ; காதலனைப் பிரிந்து அவனேக் காணப்பெருமையால் வருந்தும் காதலி ஒருத்தியின் அழகு கெட்டு அழிவதற்குப், பொருள் இல்லாதவன் இளமை, அனுபவிக்கவேண்டிய இன்பத்தை அனுபவிக்க முடியாது வீணே அழிவதை உவமையாக்கி, பொருளில்லான் இளமைபோல் புல்லென்ருள்,' என்று கூறும் அவர் உள் ளத்தை உணர்தல் வேண்டும். பொருளின் அருமையை அறிந்த கபிலர், அதைப் பயன்கொள்ளும் முறையையும் உணர்ந்துள்ளார்; இல்லற வாழ்வினை மேற்கொண்டு வாழ்வது, தன்வீடு நோக்கி வரு வார்க்கு வேண்டுவன அளித்து, அவர் வறுமைத்துயர் ஒழிப்பதற்கே ; தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்ருங்கு ஐம்புலத்தாறு ஒம்பல் தலை,” என்பர் வள்ளுவர் ; பொருளைப் பெறுவது, இரப்போர்க்கு அதைக் கொடுத்துப் புகழைத் தாம் பெற்று வாழ்வதற்க்ே; ‘ஈதல், இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு செல்வத்துப் பயனே ஈதல்,” என்பர் பெரி யோர்; கொடுத்துப் பயன்பெறும் செல்வமே சிறந்து விளங்கும். இவ்வுண்மையை உணர்ந்த கபிலர், நற்றிணைப் பாட்டொன்றில் 'இசைபட வாழ்பவர் செல்வம்....காண் டொறும் பொலியும்,' என்று கூறிச் செல்வம் பெற்ருர் கடமையை வலியுறுத்துவர். ஒருவனுக்கு இறப்பதைவிடக் கொடிய துன்பம் வேறு இல்லை; இதை அனைவரும் ஒப்புக்கொள்வர்; ஆனால், வறிய வன் ஒருவன் வந்து, பொருள் இல்லேன்; வாழ வழியில் லேன்,” என்று கூறி இாந்து நின்றபோது, அவனுக்கு ஏதேனும் தந்து அவன் துயர் களைவிக்க முடியாத நில்ை ஒருவனுக்கு உண்டானல், அப்போது அதைக்கண்டு