பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கபிலர். திலும், அவன் தகுதியறிந்து, வழங்கும் வள்ளியோன் எனத் தெரிந்தே பொருள் வேண்டினர்; பொருள் இல்லாக் குறையால்வந்தவன் என்று அவன் எங்கே எண்ணிவிடு கிருனே என்று அஞ்சி, இரக்கவந்தவன், ஆகவே கம்பால் இல்லாதவற்றையும் கூறிப் புகழ்வான், என்று எண்ணுகே; இரந்து சிற்பவனும் அல்லன் நான்; புனேந்துரையாகப் புகழ வும் மாட்டேன்; இரக்குவாரேன்; எஞ்சிக்கூறேன்.” என்று கூறினர் கபிலர் ; இதல்ை, பொருள் அருமையும், பெருமையும் உடையதே எனினும், அதைப் பெறும் வழி, பழியொடு படர்ந்ததாயின், அவ்வழிப் பெறும் பொருளே விரும்பார் கபிலர் என்பது புலனுதல் காண்க. கபிலரின் வறுமையிற் செம்மையாம் குணம், அவர் காட்டும் கலித்தொகைக் காட்சி யொன்ருல் வெளியா கிறது; செல்வ வாழ்விலே சிறக்க வாழ்ந்தவன் ஒருவன் ; எக்காரணத்தாலோ அவன் செல்வமெல்லாம் அழிந்து விட்டது; அவன் வறியன் ஆயினன் ; வளமாக வாழ்ந்த வன் ஆதலின், வறுமையின் கொடுமையை அவல்ை தாங்க முடியவில்லை; என்ருலும், அவன் இரத்துயிர் வாழ்தல் இழிவென எண்ணுவான் ; எவ்வளவோ பொறுத்துப் பார்த்தான் ; ஆல்ை, வறுமையின் கொடுமை அவனே மேலும் பொறுக்கவிடவில்லை ; அவனுக்கு உறவினர் பலர் ; அவன்பால் அன்பும் உடையவர்; தம்பால் வருவார் துயர் திர்க்கும் அருளும், அதற்கு ஏற்ற திாண்ட செல்வமும் உடையவர். அவர்பால் சென்று குறை கூறின் இழிவில்லை என எண்ணின்ை ; ஒரு நாள் அவர் வீடு சென்ருன் , அவர் முகத்தைகோக்கின்ை; வாயைத் திறந்து கன்குறை கூற இம் தொடங்கி விட்டான்; வாய் குறைகூறத் தொடங்கி விட்டது எனினும், அவன் உள்ளம் அச் செயலின், இழிவை உணர்ந்தது ; ஆகவே, அதைச் செய்ய அஞ்சிற்று வாயின் செயலைத் தடைசெய்தது; அதனல், சொல்ல விரும்பியதைத் தெளிவாகவும் சொல்லமுடிய வில்லை; சொல்ல விரும்பிய அவ்வளவையும் சொல்லமுடிய இல்லை; இடையில் அவன் காக்குக் குழறத் தொடங்கி