பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் குணநலம் 55% விட்டது ; அதனல், தன் எண்ணம் ஈடேறப் பெருமலே மீண்டான் ; இவ்வாறு பலநாள். வறுமையின் கொடுமை, பிறர்பால் குறைகூறி நிற்கும் துணிவை நாவிற்குத் தருகிறது; ஆல்ை, இரத்து உயிர்வாழ விரும்பா அவ்ன் உள்ளம், நாவின் செயலேத் தடுக்கிறது; இவ்வாறு உணர் விற்கும் செயலிற்கும் பெரும் போராட்டம் நடைபெறு. கிறது. நல்லகாலம், அவன் உள்ளம் உரன் உடையதாகவே, உணர்வு வென்றது; செயல் தோற்றது; ஆல்ை, இப் போராட்டத்தின் கொடுமையினேயும், அவ் வறுமைக் காலத் திலும், தன் செம்மைக் குணத்தில் பிறழா அவன் பண் பாட்டின் சிறப்பையும் நம்மால் உணராமல் இருக்கமுடிய வில்லை. - செல்வம் கடைகொளச் சாஅய்ச் சான்றவர் அல்லல் களைதக்க கேளிர் உழைச்சென்று சொல்லுதல் உற்று உாைகல் லாதவர். (கலித்தொகை : சுகச) உலகெலாம் வாழவேண்டும் என்ற உயர் பேருள்ளம் உடையவர் கபிலர் ; காடெலாம் வாழக் கேட்ொன்று. மில்லை, என்ற உண்மையை உணர்ந்தவர் ; அதனல் உலகக் கேட்டினைத் தம்கேடாகவும், உலக இன்பத்தைத் தம் இன்பமாகவும் கொண்டார்; உலகத்தார் வருங்கில்ை அவர் வருந்துவார் ; உலகத்தார் மகிழ்ந்தால், அவர் மகிழ்வார் ; கபிலர்தம் இவ்வுள்ளச் சிறப்பினே அவர் பாடிய அகநானூற் றுப் பாட்டொன்றில் கண்டு அறிவுடையோர் மகிழ்வர். . தலைமகன் தன்னை மணந்துகொள்ள விரைவில் வந்திலனே என வருந்திக்கொண்டிருக்கிருள் தலைவி; தலைவியின் வருத்த கிலே கண்டு, கண்ணிர் விட்டுக் தலங்கு கிருள் அவள் உயிர்த்தோழி : ஒருநாள், மணம்_செய்தி கொள்வதற்கான மாண்புகளோடு தலைவன் திடுமென வந்துசேர்ந்தான். அதைத் தோழி கண்டாள்; அவள் இன்பம் கரைபுரண்டோடத் தொடங்கிற்று; தன் இன்பத் தின் எல்லை காணமாட்டா அவள், அதன்_பெருமையினை உணர்த்த அழகிய உவமை ஒன்றைக் கூறுகின்ருள்: