பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் குணநலம் 57 பிற புலவர்களைப் போற்றிப் புகழமாட்டார்கள்; அவர் கம் புலமை கண்டு பொருமை கொள்வார்கள், என்ற தவருன எண்ணம் தமிழ்மக்கள் உள்ளத்தில் எவ்வாருே இடம் பெற்றுவிட்டது. ஆனல், பழந்தமிழ்ப் புலவர் வரலாற்றை அறியக் கிடைத்த சிறிய வாய்ப்பைக்கொண்டு நோக்கிய வழி, அத் கவருண கொள்கைக்குத் தமிழ்நாட்டில் இடம் இல்லை என்பது தெளிவாகும்; கபிலர் பெரும் புலவர் ; புலவர்களும் போற்றும் புலமை வாய்ந்தவர்; அவர், தம்மையொத்த புலவர்களைப் பொதுவாகவும், சிலரைக் குறிப்பிட்டும் புகழ்ந்துள்ளார்; புலவர் பொய் கூருர் ; புலவர் பயனில் சொல் பாராட்டார்” என்றெல்லாம் புகழ் கிருர்; புலவரெல்லாம் புலவராகி விடார்; அவருள் பெரும் புலவர் உளர்; அவர் புலமையின் பெருமையறிந்து அவரைச் சிறப்பித்தல் வேண்டும்” என்றெல்லாம் புலவர் களைப் பொதுநிலையில் போற்றும் கபிலர், கழாத்தலையார் என்ற புலவர் தம் செய்யுட் சிறப்பினேயும், அவர் சொல் லின் துய்மையினேயும் போற்றிப் போற்றிப் புகழ்ந் துள்ளார். கழாத்தலையார் செய்யுள், புலவர்கள் புகழைப் பெற்ற புகழ் வாய்ந்தது :-'புகழ்ந்த செய்யுள் கழாத் தலை’-என்ருர்; இருங்கோவேள் முன்னேன் ஒருவன் கழாத்தலையாரை இகழ்ந்ததினலேயே அவர்களுக்குரிய அரையப் பேரூர் அழிந்தது” என்று கபிலர் கூறுகிருர்; 'இருபாற் பெயரிய உருகெழு மூதர்க் - கோடிபல அடுக்கிய பொருள்துமக் குதவிய டுேகிலே அரையத்துக் கேடும் கேளினி, தும்போல் அறிவின் துமருள் ஒருவன் புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை இகழ்ந்ததன் பயனே.” - (pl. ലoല) இதல்ை, புலவர்கள் வெறும் புலமை மட்டும் உடையவ ால்லர் ஆக்கவும் அழிக்கவும் வல்ல ஆற்றலும் உடையவர் என நம்பியவர் கபிலர் என்பது புலனும். இவ்வாறு, புலவர் பாராட்டும் கபிலரின் பேருள்ளம்கண்டு நாம் பாராட்டக் கடமைப் பட்டுள்ளோம்.