பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 க பி ல ர் பாணர் பாடல்கள் வரலாற்றுக் குறிப்புக்கள் செறிந்து காணப்படுவதுபோல், கபிலர் பாடல்கள் அறவுரை கிறைந்து காணப்படுகின்றன. தங்கள் புலமையைப் புலப் படுத்திப் பொருள்பெற்று வாழ்வதே வாழ்வின் குறிக் கோள் என்று கொண்டவரல்லர் பண்டைக்காலப் புலவர் கள்; மக்கள் வாழ்வை வாழ்விக்க வந்தவர்கள் நாம் ; மக்களுக்கு வழிகாட்டுவதே நம் கடமை' என்று உணர்ந்த வர்கள் ; புலமை ஒன்றே பொருளாகக் கொண்டிருந்தன சாயின் அவர் பாடல்கள் எப்பொழுதோ பொன்றி யிருக்கும்; அவை பொன்ருப் புகழ் பெற்று இன்றும் விளங்குவது, புலமையோடு பொன்னுரை பல பொதியப் பெற்றிருப்பதினலேயேயாம். அறவுரை கூறுவதற்கென்றே சில நூல்கள் அமைக் துள்ளன எனினும், இலக்கிய வளமே குறிக்கோள் போல் பார்வைக்குத் தோன்றும் பழந்தமிழ்ப் பாடல்களும் கிே உரைப்பதைத் தம் நெறியெனக் கொண்டுள்ளன ; அப் பாடல்கள் ஒவ்வொன்றும், அக்கால மக்கள் வாழ்வின் ஒவ்வொரு கிலேயினேயும் வகுத்துக்காட்டி, அவ்வாறு காட்டுவதன் வழியாகவே, வகை வகையான நீதிகளை உணர்த்துகின்றன; இவ்வாறு மறைமுகமாக அறவுரை பல வழங்குவதோடு, அறம் உரைக்கும் அருந்தொடர் பல வற்றையும் அப் பாக்கள் பெற்றுள்ளன ; இவ்வாறு நீதித் தொடர்கொண்ட கபிலர் செய்யுட்கள் கணக்கில்; அவர் செய்யுட்களில் கண்ட அறவுரை பலவற்றுள் சில இவை: அறம்புரி செங்கோலன் ஆவோன் மன்னன்; அஞ்சுவது அஞ்சாதான் அறனிலி ஆவன்; ஆர்வுற்றர் நெஞ்சம் அழிய விடாதே; ஆற்ருர் எனினும் அவர் குற்றம் கூறற்க; இல்லோர் புன்கண் தீர்ப்பது வண்மை; இனத்தின் இயன்ற இன்னுமை இனிது; இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கலாற்ருக்கால் தன் மெய்துறத்தல்தலை, உற்ருர் இடுக்கண் தீர்ப்போன் உர வோன்; நட்டார்க்குத் தோற்றலை நாணுமை வேண்டும்; நல்ல வர் நானும் நிலை நன்று; நல்லார்கண் தோன்றும் நாவடக்கம்;