பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் குணாலம் - 59. நட்டு நாடாமை நன்று; நாடி நட்டலும் நன்று; பிறர் உறு. விழுமம், தம்முறு விழுமம். உளநூல் உணர்ந்தோர் நீதிஉரைகளே நேரே கூறு வதிலும், அந் நீதிகள் பொதித்த கதைகளைக் கூறுவதே பெரும்பயன் அளிக்கும் என்பதை அறிவர். பண்டைக் காலப் புலவர்கள் மக்கள் மனப்பண்பு அறிந்தவர்கள் ; ஆகவே, அவர்கள் உணர்த்த விரும்பும் விழுமிய கொள்கை கஃாச் சிறுகதைகள் போன்ற சிறு சிறு சிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டி, அவற்றின் வாயிலாக உணர்த்துவா ராயினர்; அவ்வாறு உணர்த்த வக்த பாடல்களே, அகத் துறைப் பாடல்கள் ; அகத்துறைப் பாடல்கள் ஒவ்வொன் ஆறும், வாழ்வைப் பண்படுத்தும் பண்புடையன. மக்கள் காணும் நிலையிலும், காணுமறைவிலும் நிகழும் நிகழ்ச்சிகளை நிகழ்ந்தவாறே எடுத்துக் காட்டுவது ஒருமுறை , இன்று எழுதப்படும் சிறு கதைகளிலும், படக் கதைகளிலும் காண்பது அதுவே, அம் முறை பெரும் பயன் அளிப்பதாகாது. இவ்வாறு நிகழ்தல் வேண்டும்; இவ்வாறு நிகழ்ந்தால்தான் கன்று என்று நன்முறையில் எண்ணி, அவ்வாறு கிகழ்ந்ததாக எழுதப்படும் கதைகளே நல்லன; அவற்றில் வரும் நிகழ்ச்சிகள் கிகழக்கூடாதனநிகழ இயலாதனவாகத் தோன்றலாம்; ஆனல் வாழ்வில் அவை நிகழ்தல் வேண்டும்; நிகழ்ந்தால வாழ்க்கை வள முறும் என்ற எண்ணத்தைத் தாண்ட அவை பயன்படும். அத்தகைய கதைகளே காட்டிற்குத் தேவை. - அகத்துறை தழுவிய பாடல்கள் அறிவிக்கும் நிகழ்ச்சி கள் ஒவ்வொன்றும் இவ்வியல்புடையன; ஆகவே, அவை அறிதிற்குரியன தமிழில் அகத்துறைப் பாடல்கள் அள வற்றுள்ளன ; அவ்வளவையும் அறிதல் இயலாது; ஆகவே, கபிலர் பாடிய அகத்துறைப் பாடல்களில் சிலவற்றை யாவது கண்டு, அவை காட்டும் வாழ்வின் கில்ே சிலவற்றை அறிந்து பயன் கொள்வோமாக, - - ஒரு தலைமகள், தலைமகன் ஒருவனேடு உறவு கொண்டு விட்டாள். அவன் கூட்டுறவால், அவள் உடலழகும் சிறிது