பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் குணநலம் 61 தோழி கூறியது இவ்வளவே; ஆனல், அச் சொற்கள் தலைமகள் அறிவிற்கு எவ்வளவு பெரிய வேலையைக் கொடுத்துவிட்டன நம் கண்ணே மாவீழ்த்துப் பறித்த செவ்வேலினுக்கு ஒப்பிடுகிருள் தோழி ; அவ்வாறு கூறும் அவள் கருத்தென்ன? தலைவன் உள்ளத்தில் பாய்ந்து, அவனுக்குக் காதல்நோய் அளித்து மீண்ட உன் கண் களைப்பார் என்று நம் களவொழுக்கம் அறிந்து கடித்து கூறிய சொற்களன்ருே அவை? என்று எண்ணினுள். "கிளிகள், கதிர்களைக் கவர்ந்து செல்வதை மயில் பார்த்துக் கொண்டிருக்கிறது : மயில் பார்த்துக் கொண்டிருப்பதை அறியாத கிளிகள் தாம் கதிர்களைக் கவர்ந்து செல்வதை எவரும் அறியார் என எண்ணி ஏமாறுகின்றன. இதை என் அவள் நமக்குக் காட்டவேண்டும்? நான் தலைவனேடு கொண்டுள்ள களவொழுக்கத்தை அவள் அறிந்து கொண் டுள்ளாள் ; அவள் அறியாள் என எண்ணி ஏமாறுகிறேன்; என் அறியாமை கண்டன்ருே என்னை எள்ளி நகைக் கிருள் ? என்று தலைமகள் அஞ்சிள்ை. இவ்வாறு, கினேக்கதிர்களைக் காக்கவேண்டியது உன் கடமை ; அதில் நீ தவறிவிட்டாய்; கிளிகள் கதிர்களைக் கவர்ந்து செல்கின்றன ; பார்த்துக்கொண்டு வாளா இருக் கின்ருய், களவு போகிறது என்பதையே உன்னுல் அறிந்து கொள்ள முடியவில்லை : தோன் இவ்வாறு அறிவற்றவளாகி விட்டாய் என்ருல், என்னையும் அறிவற்றவள் என எண்ணி விட்டாய் ; கடமையில் தவறுவேன் நான் அல்லேன் ; கின்னேக் காக்கக் கடமைப் பட்டவள் கான் ; உன் கள வொழுக்கத்தையும் அறிவேன்; நீ சுடமையில் தவறுவதை யும் அறிவேன் ; ஆகவே அறிவன அறிந்துடை” என்று தலைமகளுக்கு அறிவூட்டும் தோழியின் அறிவே அறிவு ! தோழி, தன் செயல் உணர்ந்துகொண்டாள் என்ப தறிந்த கலைவி, அவளிடம் உண்மையை உணர்த்தி விட்டாள். தலைவியின் நல்வாழ்வில் காட்டமுடையவள் தோழி; ஆகவே, கலைவனின் பேரும், ஊரும், பண்பும் யாவை எனவும், அவர்கள் உறவினுக்கு யாதேனும் கேடு