பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 க பி ல ர் கேரின், அதை முன்னின்று தடுத்தற்காய வழி யாதேனும் உண்டா எனவும் அறிந்துகொள்ளத் துடிக்கிறது அவள் அன்பு உள்ளம் அவ்வாருயின், கின் அன்பைக் கவர்ந்த அந்த ஆண்மகன் யார்? அவன் உன்னேக் கண்டு அன்பு கொண்ட்து உண்மைதான? அவன் நம்புதற்குரியனரி அவன் உன்னேடு உறவுகொண்டது உண்மை என்பதை அறிந்து கூறுவார் யாரேனும் உளரோ? என்று கேள்வி மேல் கேள்விகள் கேட்கலாயினுள். அதற்கு அத் தலைவி கூறிய விடை அவள் பிள்ளேஉள்ளத்தைத் தெள்ளெனக் காட்டுகிறது. தோழி! அவர் என்னேக்கண்டு உறவு கொண்ட காலத்தில் அங்கு வேறுயாரும் இல்லை ; என் உள் ளத்தைக் கவர்ந்த அவர் ஒருவரே அங்கிருந்தார்; காங்கள் இருந்த இடத்திற்கு அருகே உள்ள நீர்நிலையில் நாரை ஒன்று மட்டும் இருந்தது; ஆல்ை, அவர் என்ைேடு உறவு கொண்டதை அது பார்க்கவில்லை; தன் உணவைப் பெறும் கருத்தோடு ஆரல்மீன் ஓடிவராதா? என நீரையே நோக்கிக்கொண்டிருந்தது; ஆகவே, அது எங்கள் உறவினே அறியும் சான்ருகாது; பிரியேன், பிரியின் உயிர் தரியேன், அறனல்லன செய்தவனும் ஆவேன்’ என்று அவர் உரைத்த குளுறவு ஒன்றே பற்றுக்கோடு; அவர் அதை மறுக்கார்; மறுத்துப் பொய் கூறிவிட்டால் அங் நிலையில் வேறு பற்றிலேன்,” என்று தன் நிலைமையை உள்ளவாறு உணர்த்தினுள் : 1 யாரும் இல்லை ; தானே கள்வன் ; தான் அது பொய்ப்பின், யான் எவன்செய்கோ ? தினத்தாள் அன்ன சிறுபசுங்கால் ஒழுகுநீர் ஆால் பார்க்கும் குருகும் உண்டு ; தான் மணந்த ஞான்றே.” (குறுந்: உடு) · · இவ்வாறு கூறக்கேட்ட தோழி, இப்படியும் ஒரு பெண் எமாந்து போவாளா என எங்கே சினம் கொள் வாளோ? என எண்ணிய தலைவி, அதுவும் என் கவ றன்று ; அது நாரையைக் கண்டதால் நேர்ந்த பிழை; அப் பாடத்தை நாரை கற்றுக் கொடுத்தது; உணவைப்