பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 க பி ல ர் பழுக்கும்; ஆகவே நன்கு பழுத்துவிட்டாலும் காம்பு அறுந்து கீழ்ே விழுந்து பாழாய்விடும் என்று அஞ்ச வேண்டுவதும் இல்லை ; ஆகவே உங்கள் காட்டுப் பலாப் பழங்கள் இயற்கையில் அழிவகோ, கள்வரால் கவரப்படு வதோ இல்லை ; நீ அத்தகைய மரங்களேயே பார்த்துப் பழகியவன்; ஆதலின், இதோ கிற்கும் இப் பலாவினைக் கண்டதும் உன் உள்ளத்தில் எத்துணையும் அச்சமுண் டாகவில்லை; இப் பலா மரத்திற்கு வேலி ஒன்றும் இல்லை ; ஆகவே, அதன் அருகிற் சென்று பழத்தைப் பறித்துச் செல்லுதல் எவர்க்கும் எளிது; மேலும் அப் பழத்தின் பருமையினையும், அதைத்தாங்கிக்கொண்டிருக்கும் காம்பின் சிறுமையினையும் கோக்குவாயாக ; அக் காம்பு பழத்தை இதுவரை தாங்கியிருப்பதே அரிய செயல்; அப் பழம் மேலும் பருத்துப் பழுக்கத் தொடங்கினல், பிறர் பறித் துப் போவ்தேயன்றி, தாங்கிய கிளே முறியக் கீழே விழுந்து தானே அழிதல் உறுதி ; ஆகவே, அப் பழம் பழுக்கும் காலம்வரை காவல் புரிந்து, பக்குவம் அடைந்த தும் பறித்து வைக்கவேண்டிய கவலை எங்களுக்கு ; அத் தகைய கவலை உங்கள் நாட்டார்க்கில்லை; ஆகவே எங்கள் கவலை உனக்குத் தெரியவில்லை; இப்போதாயினும் எங்கள் கவலையின் ஆழத்தை அறிந்துகொள்வாயாக ; அப் பழம் தானும் பாழாகாமல், மரத்தையும் பாழாக்காமல், பிறர் கைக்கும் போகாமல் எங்களுக்கே கிடைக்கத் துணை புரிவாயாக,” என்று கூறினுள். - தலைவி தனக்கே உரியவள் ; பிறர் எவரும் அவளேப் பெறல் இயலாது; அவளும் எவ்வளவு பெரிய காதலையும், எவ்வளவு காலம் வேண்டுமானுலும் தாங்கியிருப்பாள் என்று கவலையற்றிருப்பது தவறு ; கலைவி பாதுகாப் பற்றவள் ; அவளே மணந்துகொள்ள எவரும் விரும்புவர் ; பெற்ருேரும் எவருக்கு வேண்டுமானலும் கொடுத்து விடுவர் ; அவ்வாறில்லையாயினும், தலைவியின் உயிரோ மிகமிக மென்மை உடையது; ஆனல், அவள் கின்பால் கொண்டிருக்கும் காதலோ அளவிடற்கரிய பெருமை