பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் கையாண்ட உவமைகள் 7丑 உவமைப் பொருளே உணர்த்துவதே. உவமை அணியை ஆள்வதில் கபிலர் புதுமுறை கண்டவர்; பாரி, பாரி' என்ற புறநானூற்றுச் செய்யுளில், உவமை அணியினை ஆண்ட அழகிய புதுமுறை ஒன்றைக் கண்டோம்; அவர் கண்ட புதுமுறைகொண்ட மற்ருேர் செய்யுள் ஒன்றைக் காண்போம். சேரமான் செல்வக்கடுங்கோவாழியாதனைச் சிறப்பிக் துப் புறத்தில் பாடிய பாட்டொன்று, கபிலர் கையாண்ட அழகிய உவமைக்கு ஒர் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. செல்வக்கடுங்கோவிற்கு ஒப்பாவன் கிங்கள் என்று உவமை கூறுவதைக் கண்டார் கபிலர்; செல்வக்கடுங்கோ, கிங்களி னும் சிறந்தவன் என்றுகூறி அவ்வுவமையின் பொருளை மேலும் சிறப்பிக்க விரும்பினர்; ஒத்த இரு பொருள்களையே உவமை கூறவேண்டும்; முற்றிலும் முரண்பட்ட இரு பொருள்களே உவமையும் பொருளுமாய் இணைத்தல் கூடாது; செல்வக்கடுங்கோ பால் நல் இயல்புகள் சில உள்ளன; அவை கிங்கள் பால் இல்லை; திங்கள்பால் சில தீக்குணங்கள் உள்ளன: அவை செல்வக் கடுங்கோ பால் இல்லை. ஒருவர் இயல்பு, மற்ருெருவர்பால் இல்லை என்பது மட்டும் அன்று; அதற்கு மாருன, இயல்பு அவர்பால் குடிகொண்டுளது; ஆகவே சேரலாதன்பால் உள்ளன எல்லாம் நல்லன; கிங் கள்பால் உள்ளன எல்லாம் சீயன; இவற்றைக் கூற வந்த கபிலர், செல்வக் கடுங்கோபால் உள்ள சிறப்பியல்புகள் இவை இவை; அவை திங்கள்பால் இல்லை; அவை இல்லை. என்றதுமட்டும் அன்று. அத் திங்களிடம் அவற்றிற்கு மாருன் தீக்குணங்கள் உள்ளன என்று கூறியிருக்கலாம்; அல்லது, கிங்கள்பால் உள்ள சீக்குணங்கள் இவை இவை: அவை செல்வக்கடுங்கோபால் இல்லை; அவன்பால் 'அவை இல்லை என்பது மட்டும் அன்று அவற்றிற்கு மாருன நற் குணங்களால் கிறைந்துள்ான் என்று கூறியிருக்கலாம்; எவ்வாறு கூறியிருப்பினும் கூறவ்ேண்டிய பொருள்களைக் கூறியவராவர். ஆனல், அவ்வாறு கூறுவத் தம் புலமைக்