பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் கையாண்ட உவமைகள் 75. ஊக்கம் கொண்டு உயரும் அவன் எங்கே ! உள்ளதே. போதும் என்றெண்ணும் உரனிலான் நீ எங்கே! நாள்தோறும் ஒரு கலையெனப் பதினேந்து நாள் தேய் கின்ருய்; பின்னர் நாள்தோறும் ஒரு கலையெனப் பதி னேந்து நாள் வளர்கின்ருய்; உனக்குத் தேய்வதும், வளர் வதும் வாழ்வாகப் போய்விட்டது. ஒடுங்கா உள்ளம் கொண்ட கடுங்கோ எங்கே! ஒடுங்கி, ஒடுங்கி ஒளிவிடும் நீ எங்கே ! உலகிற்கு ஒளிதந்து உதவுகின்ருய் என்பர்; ஆல்ை; உன்பால் உள்ள எல்லா ஒளிகளையும் எல்லா நாளிலும் அளிப்பதில்லை; உள்ளபோது நாள்தோறும் ஒரு கலை ஒளி உயாட்டும்; இல்லாதபோது நாள்தோறும் ஒரு கலை ஒளி குறையட்டும் என்று பங்கீடு செய்தன்ருே உதவுகின்றன; வரையாது வழங்கும் வாழியாதன் எங்கே! வாம்பிட்டு உதவும் நீ எங்கே ! உனக்கும் ஒரு பெரும் படை உண்டு என்பது உண்மை; வானத்து மீன்கள். எல்லாம் கின் தானேகள் தாம்; ஆனால், அவை அளவால் பெரியனவே என்ருலும் ஆற்றலால் சிறியன; கின் பகைவன் ஞாயிறு தோன்றப் போகிருன் என்று அறிந்தால் போதும்; அவை அவனேக் காணுமுன்பே, கின்னேயும் தனியே விட்டன்ருே ஒடி. ஒளிந்து விடுகின்றன; பகைவர் படை கடந்து வெல்லும் படையுடைய அவன் எங்கேரி பயங்கோடும் படையுடைய நீ எங்கே ஆகவே, நீ அவனுக் கொப்பாய் என்பது மட்டும் அன்றி அவனினும் நீ இழிவுடையாய் என்று கூறி முடித்தார். . . . . . . . . . . . . .” இவ்வாறு செல்வக்கடுங்கோவின் குணச் சிறப்பை எடுத்துக் கூறி, அவற்றைக் கூறுவதிகுல்ேயே திங்கள்பால் உள்ள குறைகளைக் குறிப்பால் சுட்டிக் காட்டிய கபிலர், பாட்டின் பிற்பகுதியில், திங்கள்பால் உள்ள வேறு பல இழிகுணங்கள்ை எடுத்துக் கூறி, அவற்றைக் கூறுவதி ஞலேயே சேரலாதன்பால் உள்ள வேறு பல சிறப்புக்களைச் சுட்டிக் காட்டுகின்ருர், - ; : :"...' . . . . . . . .”.” ; ::: *