பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£6 க பில ர் திங்கள் நாள்தோறும் தோன்றுவதும், மறைவதும், ஞாயிறுபோல் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் கிகழ்வதில்லை; ஒரு நாள் தோன்றிய அதே நேரத்தில் மறுநாள் தோன்று வதில்லை; ஒரு நாளைக்கொருநாள் இரண்டு இரண்டு நாழிகை கழித்தே தோன்றும். ஞாயிறு தோன்றியதும் கிங்கள்ஒளி மங்கிவிடும்; தோற்ற அரசர்கள், தம்மை வெற்றிகொண்ட வேந்தர்கள் முன் கிற்குங்கால் முகம் வெளிறி சிற்பார்போல் தோன்றும் அப்போதைய அதன்தோற்றம். கிங்களின் ஆட்சி, ஒரு மாதத்தில் நடைபெறும் இடத்திலேயே மறு மாதத்திலும் நடைபெறும் என்பது இல்லை; மார்கழி திருவாகிரையில், தை பூசத்தில், மாசி மகத்தில், பங்குனி உத்திரத்தில் என்று இவ்வாறே அதன் ஆட்சியிடம் மாதந்தோறும் மாறி மாறி வரும். - திங்கள் மேற்கே சென்றவுடன் மல்களுக்கப்பால் மறைந்து ஒளிந்துகொள்ளும்; அங்கிலையில் அதை எவரும் காண இயலாது. திங்கள் ஒளி விளங்கும் இடம் அகன்ற பெரிய வானம்; என்ருலும், விண்ணுலகம், மண்ணுலகம் என்ற உலகங்கள் இரண்டில் அதன் ஆட்சி ஒரு உலகத்திலேயே கின்று விடுகிறது. - - கிங்கள் பதினறு கலைகளையும் கொண்டு விளங்கும் காலத்தும், அது பகற்காலத்தில் வரின், அதன் ஒளி விளங் குவது இல்லை; அதன் ஒளி இரவில் மட்டுமே விளங்கும்; பகலில் மங்கிவிடும். இவ்வாறு #န့r- வகையானும் நீ குறையுடையாய்; குற்ைபுடைய சேர்லாகைேடு ஒத்து விளங்க் விரும்பு கி முய் அவன்பர்ல் இக் குறைகளில் ஒன்றையேனும் கர்னல் இயலாதே; அவன்பால் இக் குறை யொன்றும் இல்லை என்பது மட்டும் அன்று; இவற்றிற்கு மாருன கிறை குணங்களன்ருே அவன்பால் குவிந்துகிடக்கின்றன.