பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் கையாண்ட உவமைகள் 77. சோலாதன் காலத்திற்குக் கட்டுப்பட்டவன் அல்லன்;. காலம் கருதிக் காத்திருப்பவனும் அல்லன்; காலங்கடந்த கடுங்கோ எங்கே காலத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கும். நீ எங்கே ! சேரலாதைேடு போரிட்டுப் புறங்கொடுத்த மன்னர் கணக்கிலர்; எல்லார் புறனும் தான் கண்டு, தன்புறம் காண்பார்க்குக் காண்பறியலன்' எனப் போற்றப்படும் அவன் எங்கே! ஞாயிறு கண்டதும், தோற்றுப் புறம் காட்டி ஒடுவார்போல் ஒளிமங்கும் நீ எங்கே ! . நாடாறு மாதம், காடாறு மாதம்; அங்கே சில நாள், இங்கே சிலநாள் என்ற நிலையற்ற ஆட்சியுடையானல்லன் அக் கடுங்கோ; நிலைபெற்ற ஆட்சியுடைய அவன் எங்கே ! திங்கள் தோறும் இடம் மாறும் நீ எங்கே ! சேரலாதன் நாடு மலைகள் பல செறிந்தது; அவன் நாட்டு மலைகள் கிங்களேயும் மறைக்கும் உயர்வுடையன; இவ் வாறு மதியையும் மறைக்கும் மலைக்குரிய அவன் எங்கே ! அம்மலையால் மறைப்புண்டு மாண்டு கெடும் நீ எங்கே! சோலாதன் புகழ், விண்ணுலகம், மண்ணுலகம் இரண்டிலும் பரவியுளது; இரு உலகத்தாரும் அவனைப் புகழ்வர்; இவ்வாறு விண்ணுலகும் மண்ணுலகும் தன்னதே ட்சி என விளங்கும் அவன் எங்கே! விண்ணுலகம் ஒன்றிலேயே ஒளிவிடும் நீ எங்கே ! அரக்கர்க்கு இரவில் ஆற்றல்; காக்தைக்குக் 弟 கடும். பகலில் கண், கும்பிருட்டில் கூகைக்குக் கண்; இவ்வாறு ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு காலத்தில் மட்டுமே ஆற்றல் % ဒါ့..ဒီ့ ம் என்ப; ஆனல் சேரலாதனுக்கு இரவு, பகல் இருகால்த்திலும் ஆற்றல் உண்டு; இரவும் பகல் எப்போதும். தப்பாது விளங்கும் அவன் எங்கே! 'பகல் விளங்காய்" என்ற பழியுடைய நீ எங்கே! ஆகவே, அவனே நீ ஒவ்வாய்' என்று கூறி முடித் தார்; சேரலாதன்ைச் சிறப்பிக்கத் தொடங்கி, திங்களே