பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ... ." கபிலர் அவனுக்கு ஒப்பிடுவார்போல் காட்டித் திங்களினும் அவன் உயர்ந்தவன்; எவ்வாற்ருனும் இழிவுடையது கிங்கள்; ஆகவே கிங்கள் அவனுக்கு ஒப்பாகாது என்று உவமையை மறுத்துக் கூறினர். சேரலாதன்பால் இன்னின்ன குணங்கள் உள்ளன : ஆகவே கிங்கள் அவனுக்கு ஒப்பாகாது என்று கூறி, அவன்பால் உள்ள குணங்களுக்கு நேர்மாருகத் திங்கள் பால் உள்ள சில குறைகளைக் குறிப்பால் தோன்றச் செய்தார் ; அவ்வாறே, கிங்கள்பால் இன்னின்ன குறைகள் உள்ளன ; ஆகவே, அது அவனுக்கு ஒப்பாகாது என்று கூறி, அத் திங்கள்பால் உள்ள குறைகளுக்கு நேர்மாருகச் சேரலாதன்பால் உள்ள சில குணங்களைக் குறிப்பால் தோன்றச் செய்தார். இவ்வாறு, உவமிக்கப்படும் பொருளின்பால் உள்ள குணங்கள் சிலவற்றைக் கூறுவதன் மூலம், உவமையின் ப்ால் உள்ள குறைகள் சிலவற்றையும், உவமையின்பால் உள்ள குறைகள் வேறு சிலவற்றைக் கூறுவதன்மூலம், உவமிக்கப்படும் பொருள்பால் உள்ள குணங்கள் வேறு சிலவற்றையும் குறிப்பால் உணர்த்திய கபிலர் உவமைத் திறம் உணர்ந்து மகிழ்தற்குரியது. இத்தகைய புதுமுறை உவமைகளேயன்றி, கபிலர் மேற்கொண்ட வேறுபல உவமைகளும் உண்டு, அவையும், அவர் புலமைக்கேற்பச் சிறந்து விளங்குவனவே ; அவை அனைத்தையும் எடுத்துக்காட்டி விளக்கின் அதுவே ஒரு பெரு நூலாய் அமையும்; ஆகவே, அவற்றை அவர் பாடல் களைப் பயிலுங்கால் படிப்போரே அறிந்து மகிழட்டும் என்று விடுத்து விடுவதே நலம். என்ருலும், கபிலர் உள்ளத்தை உணர்த்தம் வகையில் வந்துள்ள உவமைகள் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுச் செல்கிறேன். கல்வி, பொருள், காவல் இவை குறித்துக் கணவன் பிரியக்கவினழிந்து கிற்கும் தலைமகள், நீர் இன்றி வாடும் பயிர் போலவும், கையிற் காசு இல்லாதவன் இளமை