பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் கையாண்ட உவமைகள் 79 இன்பம் பெறுவதின்றி வீணே கழிவதைப் போலவும், இளமையில் நல்வழி ஒழுகாதவன் முதுமையில் துன்புற்று வாழ்வதைப் போலவும் வாடி, அவன் இனிதே வந்து சேர்ந்தான் என்பது அறிந்த உடனே, நீர் நிறையப்பெற்ற நிலம் போலவும், அருள் உள்ளம் உடையவன் செல்வம் சிறந்து விளங்குவதைப் போலவும், ஆண்மையும் ஆற்றலும் உடையான் பெற்ற பெருஞ்செல்வம் போலவும், பொற்பும் பொலிவும் பெற்று விளங்கினுள் என்பர். ' ாேற்ற புலமே போல் புல்லென்ருள், கார்பெற்ற புலமே போல் கவின் பெறும்; பொருள் இல்லான் இளமை போல் புல்லென்ருள்; அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும்; அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள் திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத் தகும். பாரியின் கொடைச் சிறப்பைக் கூற வந்த இடத் தில், தன்னைப் பாடி வந்தவர், பெண்களே யாயினும், அறிவுக்குறை பெற்ருேரே ஆயினும், அவர் பெண்மையும், புன்மையும் கருதிப் போக்கிவிடாது அவர்க்கும் பொருள் கொடுத்து அனுப்புவன் என்பதை விளக்க, தன்னை மலரிட்டு வணங்குவோர், எருக்கம்பூவே சூட்டினும், அவர் செயல் கண்டு வெறுக்காது, அதை விரும்பி ஏற்றுக் கொள்ளும் இறைவன் செயலை உவமை கூறினர். புல்லிலே எருக்கமாயிலும் உடையவை கடவுள் பேளுேம் என்னுங்கு, மடவர், மெல்லியர் செல்லினும் கடவன்பாரி கைவண்மையே.”