பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிப்பாட்டு 81 என்பதும் இதுவே ; புணர்தலாகிய இம் முதல் ஒழுக்கத் திற்கு உரிய இடமாக இக் குறிஞ்சியைய்ே கொண்டனர். புலவர்கள். அக் குறிஞ்சிஒழுக்கங்களே எல்லாம் ஒன்று திரட்டிக் கூறுவதே கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டு. குறிஞ்சி ஒழுக்கங்களுள் அறத்தொடுநிற்றல் என்பது ஒன்று. ஒருவனும் ஒருத்தியும் காதல் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்; அவர்கள் காதலொழுக்கம் அறியாப் பெற்ருேர், பெண்ணிற்குத் தாங்கள் விரும்பிய ஒருவனுக்கு மணம் செய்யத் தொடங்குகின்றனர்; தங்கள் காதல் நிறைவேற வேண்டுமே என்ற கவலையுற்று வாடும் பெண்ணேக்கண்டு, அவள் நோய்தீர வெறியாடத் தொடங்கு கிருள் தாய். இங்கிலையில் பிறர் அறியாவாறு காதல் கொண்டு வாழ்ந்த தங்கள் களவொழுக்கத்தினை மேலும் மறைத்து வைப்பின் கேடாம் என அறிந்த தலைமகள், அதைத் தன் கோழிக்கு அறிவிப்பள் ; தோழி அதைச் செவிலித்தாய்க்கு அறிவிப்பள்; அவள், பெற்ற தாய்க்கு அறிவிப்பள்; தாய் பெண்ணின் அண்ணன் தந்தையர்க்கு அறிவித்து அவ்விருவர் மணத்திற்கு இசைய வைத்துத் துணை புரிவள் ; இதையே அறத்தொடுகிற்றல் என்பர் புலவர்கள். * . . . இருவரும் ஒருவரையொருவர் காண்பது முதல் அவர் மணம்சிகழ்காலம் வரையிலும் பல்வேறு கிலைகள் உள்ளன ; முந்நூறு முந்நூற்றேழு படிகளைக் கொண்ட பத்தொன்பது மாடிகளைக்கொண்டது அக் களவொழுக்கம். பழங்காலப் புலவர்கள் எல்லாம், அப் படிகளுள் தாம். விரும்பிய சிலவற்றை மட்டும் சிறப்பித்துப் பாடிச் சென் ருர்களே ஒழிய, அவர்களுள் எவரும், அவ் விருவரும். காண்பது முதல், இறுதியில் மணம் செய்து கொள்ளும் வரையுள்ள பல்வேறு கிலைகளையும் முறையாகப் பாடின. ால்லர்; ஆல்ை, பிற்காலப் புலவர்கள் அந் நிலைகளைத் தனித் தனியே பாடி மகிழ்வதிலும், அவற்றை ஒன்றன்பின் ஒன்ருகப் பாடிக் காண்டதால் பெருமகிழ்வுண்டாம் என்று கொண்டு அவற்றை வரிசையாகப் பாடுவாராயினர். அவ் க.-6 - .