பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிப் பாட்டு 83. அளவு கனமழை ; வானத்திடத்தே ஆடிப்பறக்கிருத்த பறவைகளும் பறத்தல் ஒழிந்து காம் வாழும் இடத்தில் அடங்கின; மழை பெய்து ஒய்ந்தது; மழை பெய்த இடம் மலோடு ; ஆகவே, மலேயருவிகள் எல்லாம், மனதை மயக் கும் தன்மையவாய் மாட்சிமைப்பட்டுக் காட்சியளித்தன ; வெயிலின் வெப்பத்தால் அம் மகளிரும் வியர்த்திருந்தனர்; ஆகவே, மலேயருவி அவர்கள் மனதை ஈர்ப்பதாயிற்று ; உடனே, அவ்வருவியில் குதித்த ஆசையடக்க ஆடித் தீர்த்தனர்; கண்கள் சிவக்கும் வரை ஆடிக் கரையேறினர்; மயிசைப் பிழிந்தனர்; சாம்டோக உலர்த்தினர் ; உலர்த்தும் அவர்கள் உள்ளம் நெகிழ, அவர்கள் வாய் மனம் விரும்பும் பாடலைப் பாடிற்று. - - மூழ்கி சாம்போக உலர்த்திய தங்கள் தலைமயிரினேக் கண்ட அவர்கள், அம் மயிரிடத்தே மலர்வைத்து மகிழ எண்ணினர்; காட்டிடம் எல்லாம் ஒடியோடி சிறத்தாலும் மணத்தாலும் பல்வேறுவகைப்பட்ட மலர்களைப் பறித் தனர்; அவ்வாறு பறித்த மலர்வகை, நாறுக்கும் மேலாம். மழை ரோல் மாசுபோகக் கழுவப்பெற்ற அகன்ற பாறையில் அவற்றைக் குவித்தனர் ; மனமும் சிறமும் மயங்குமாறு மாலையாகக் கட்டினர்; கட்டிய மாலையைக் கறுத்து நீண்ட தம் தலைமயிர் முடியிலே அணிந்து அழகு செய்தனர் : இவ்வாறு ஆடிப் பாடி, அணிந்து அகமகிழ்ந்த அவர்கள், இறுதியில் ஒர் அசோகின் கிழலிலே அமர்ந்து இளேப் உாறினர்: . * . .”. அப்போது ஒர் ஆண்தகை ஆங்கு வந்தான்; அகிற் புகை ஊட்டி வளர்த்த தன் கருமயிரை எண்ணெய் இட்டுச் சீவி முடித்து, நீரிலும் நிலத்திலும், மலையிலும் மலர்ந்த மணமிக்க மலர்களே அம் மயிரிலே குடியிருந்தான்; காதிலே அசோகின் அழகிய இளந்தளிர் அணிந்திருந் தான்; மணம்காறும் சக்தனமும், மலர்மாலேயும் கிடந்து அவன் அகன்ற மார்டை அழகு செய்தன; இடக்கையில் ஒரு பெரிய வில்; வலக்கையில் வன்மையிற் சிறந்த அம்பு. க்ள்; அரையில் அருந்தொழில் அமைந்த கச்சை; காலில்